பள்ளிகளில் பொதுத்தேர்வு துவங்க
உள்ளதால், தற்காலிக மின்தடை செய்வதை தவிர்க்க, துணைமின் நிலையங்களில்
பராமரிப்பு பணிக்கு, மின் வாரியம் தடை விதித்து உள்ளது.துணைமின் நிலையம்,
மின் சாதனங்களில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது.
இவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணி நடக்கும் இடங்களில், காலை முதல் மாலை வரை மின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.தற்போது, பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதை உறுதி செய்ய, அடுத்த மாதம் வரை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக் கூடாது என, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அவசியம் இருக்கும் பட்சத்தில், உயரதிகாரிகளிடம் உரிய ஒப்புதல் பெற்று, அந்த பணிகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...