கேரளாவில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது
ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.கோடைக்காலம் துவங்க உள்ளதால்,
இந்தாண்டு முதல் நீர் பருகும் திட்டத்தை மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகளில்
நடைமுறைப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கேரள கல்வித்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:கோடைக்காலம் துவங்க உள்ளதாலும், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடுகளைப் போக்கவும், நீர் பருகும் திட்டத்தை மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகளில், நாளை மறுநாள் முதல் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தினமும் காலை 10:30 மணி மற்றும் பிற்பகல் 2:30 மணி என இரு வேளைகளில் பள்ளி வளாகத்தில் மணி ஒலிக்கப்படும். சரியாக 5 நிமிடங்கள் மாணவர்களுக்கு நீர் பருக நேரம் ஒதுக்கப்படும்.இந்த இடைப்பட்ட நேரத்தில் மாணவர்கள் போதுமான நீர் பருகுவதை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும். இதன் வாயிலாக நீர்ச்சத்து குறைபாடுகளில் இருந்து அவர்களின் உடல்நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...