இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (மார்ச்) 9ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அந்த வகையில் நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,700ம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1,600ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1,000ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தேர்வை பொறுத்தவரையில் வருகிற மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு முடிவு வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...