மொரார்ஜி ரன்சோதிசி தேசாய் |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள்:367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
விளக்கம்:
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
Old is gold
பழமையே சிறந்தது
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
நல்லது எது கெட்டது
எது என சிந்திக்க தெரியாத
மனிதன் தனக்கு மட்டுமல்ல..
மற்றவர்களுக்கும்
துரோகம் செய்கிறான்.
பொது அறிவு :
1. நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?
2. பறம்பு மலையை ஆண்ட மன்னர்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கொடி பசலை கீரை :கொடிப்பசலைக் கீரையைச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட புண்ணும் ஆறிவிடும். நீர்க்கடுப்பு, மலக்கட்டு போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
பிப்ரவரி 29
நீதிக்கதை
தவளையின் வெற்றி
ஒரு குரு சீடர்களுடன் உரையாடுவது வழக்கம். கேள்விகளையும் கேட்டு விடைகளை அவர்களிடமே விட்டுவிடுவார். எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வெளியில் புத்தியை போற்றும் சிறுகதைகளை சொல்வதை வழக்கமாக் கொண்டார். கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் சீடர்களிடம், "நான் உங்களிடம் இப்போது ஒரு கதையைக் கூறி, அதற்கான சிந்தனையையும் சொல்வேன். ஆனால் இப்போது நீங்கள், நான் சொல்லும் கதையை புரிந்து கொண்டு, நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்ல வேண்டும். புரிகிறதா?" என்று கூறினார்.
அதற்கு சீடர்களும் "சரி குருவே!" என்று கூறி அவர் கூறப்போகும் கதையை மிகவும் கூர்மையாகக் கேட்கனர். பின் குரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.
"ஒரு ஊரில் விநோதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் நினைத்து தவளைகளுக்குப் போட்டி வைத்தார்கள். அந்தப் போட்டியில் நிறைய தவளைகள் பங்கு கொண்டன. அது என்ன போட்டி என்று வியப்பாக இருக்கிறதா? சொல்கிறேன். அங்கு ஒரு சிறிய குன்று இருந்தது. அந்த குன்றின் உச்சிக்கு எந்தத் தவளை முதலில் சென்று வெல்கிறது என்பதுதான் அந்தப் போட்டி."
அந்த உச்சியின் உயரத்தைப் பார்த்தவுடன் அங்கு கூடியிருந்தவர்கள் எந்தத் தவளையும் இந்த உச்சியை அடைய முடியாது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அத்தருணத்தில் ஒரு தவளை மட்டும் அவர்கள் பேசுவதை கூர்மையாகப் பார்த்தது.
பின் போட்டி தொடங்கியதும் அனைத்து தவளைகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக முட்டி மோதி ஏறி கடைசியில் வழுக்கி விழுந்தன. ஆனால் ஒரு சில தவளைகள் சற்று நிதானமாக ஓரளவு உயரத்தை அடைந்தன. இருந்தாலும் தங்களால் மேலும் ஏற முடியாமல் கீழே விழுந்து விட்டன. இவ்வாறு இருக்க ஒரு தவளை மட்டும் உயரத்தை பொருட்படுத்தாமல் மேலே ஏறி, ஏறி குன்றின் உச்சியை அடைந்தது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்!
வெற்றி பெற்ற தவளைக்குப் பரிசு கொடுக்கும் நேரம் வந்தது. பரிசைக் கொடுப்பதற்காக அந்த வெற்றி பெற்ற தவளையைப் பார்த்து "உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?" என்று பரிசு கொடுப்பவர் கேட்டார். அந்தத் தவளை
எதுவுமே பேசாமல் இருந்தது. ''சரி இப்பொழுது உங்களை நான் கேள்வி கேட்கிறேன். அந்தத் தவளை ஏன் பேசாமல் இருந்தது?" என்று குரு
சீடர்களை கேட்டார். அனைத்து சீடர்களும் பதில் தெரியாது குழப்பத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் "தெரிய வில்லையே!" என்று குருவிடம் கூறினர்.
குருவும் "வேறு எதுவும் இல்லை! அந்தத் தவளைக்குக் காது கேட்காது, மற்றும் வாய் பேச வராது. அதனால்தான் அது எதுவும் பேசவில்லை" என்று கூறினார். மேலும் தொடர்ந்தார். "அது மட்டுமல்லாமல் அந்தத் தவளை வெற்றியென்னும் ஒரே நோக்கத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு போட்டியில் பங்கு கொண்டதால் தான் அதனால் வெற்றி பெற முடிந்தது" என்பதையும் கூறிச் சென்றுவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உறுப்புக்கள் செயல்படாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் இருந்தால் நாம் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பது தெரிகிறது.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...