அனைவரும் வருக
பள்ளிக்கல்வி உயர்கல்வி இரண்டிலும் பொதுக்கல்வி முறை வஞ்சிக்கப்படும் சூழலை அன்றாடம் சந்தித்து வருகிறோம்.
பொதுக் கல்வியைப் பாதுகாப்பதோடு எதிர்காலத் தலைமுறையையும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய கடுமையான தருணத்தில் நிகழ்கால சமூகச் சூழல் நம்மை நிறுத்தியிருக்கிறது.
தனியார் மயம் பெருகிவரும் துறையாக கல்வித் துறை முற்றிலும் எதிர்திசையில் பயணிக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச் செல்வதோடு அரசின் கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்கும் கடமையும் நமக்குண்டு.
இங்கு வாழும் ஒவ்வொரு நபருக்கும் இந்த சமூகத்தை நேசிக்கும் கடமை உணர்வு அவசியம். சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்கு சரியான கல்வியை எடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கும் உரிமையும் அதை வெளிப்படுத்தும் உரிமையும் உண்டு.
அந்த வகையில் பொதுக்கல்விமுறை தான் அதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
ஆகவே உரையாடுவோம் வாருங்கள்.
அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்வி ஆர்வலர்கள், கல்வியில் மாற்றங்களை விரும்புவோர், பெற்றோர்கள், சமூக மாற்றத்தை விரும்புவோர்கள், எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , தனியார் நிறுவன ஊழியர்கள் , பல துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு வாரீர்.
பொதுக் கல்வியைப் பாதுகாப்போம். அதுவே நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும்.
ஆகவே இறுதி வேண்டுகோளாக உங்களிடம் முன்வைப்பது, உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்காக மட்டுமாவது இம்மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள் நண்பர்களே.
சு. உமா மகேஸ்வரி
AISEC
அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி
தமிழ்நாடு கிளை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...