Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.. மெக்னீசியம் நிறைந்த 'சூப்பர்' உணவுகள்!

இன்றைய மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது.

முதியவர்களிடம் மட்டுமின்றி இளைஞர்களிடமும் அதிக ரத்த அழுத்த பிரச்சனை காணப்படுகிறது. பொதுவாக, 140/90 என்ற அளவிற்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. இரத்த அழுத்தம் 180/120 க்கு மேல் இருந்தால், அது மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால், சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன

இரத்த அழுத்தத்திற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ரத்த அழுத்தத்தாஇ கட்டுப்படுத்த மெக்னீசியம் நிறைந்த உணவுகள் உதவும்.

ஆரோக்கியமாக இருக்க, காலை உணவை மெக்னீசியம் நிறைந்த உணவுடன் தொடங்க வேண்டும்.

காலை உணவில் மெக்னீசியம் நிறைந்த பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது, நரம்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மெக்னீசியம் நிறைந்த உணவை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் மெக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் மெக்னீசியம் குறைபாடு காரணமாக, சோர்வு, பசியின்மை, குமட்டல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் தசைவலி போன்ற பிரச்சினைகள் எப்போதும் ஏற்படத் தொடங்குகின்றன. எனவே உடலில் மெக்னீசியம் குறைபாடு இருக்கக்கூடாது.
சோளம் - சோளம் பசையம் இல்லாதது மற்றும் மெக்னீசியம் நிறைந்தது. காலை உணவில் சோளத்தை சேர்ப்பதன் மூலம் உடலில் மெக்னீசியம் குறைபாட்டை ஈடுசெய்யலாம். சோளத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, உங்கள் உணவில் சோளம் கொண்டு செய்யப்பட்ட உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.

குயினோவா - குயினோவா மெக்னீசியம் நிறைந்த உணவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது சாதம் போல் சமைத்து உண்ணலாம். குயினோவாவில் அதிக புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன. சுமார் 1 கப் சமைத்த குயினோவாவில் 118 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது.

நட்ஸ் - நட்ஸ் என்னும் உலர் பழங்கள் மெக்னீசியம் குறைபாட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஈடு செய்யலாம். இதற்கு பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 80 மில்லிகிராம், முந்திரியில் 74 மில்லிகிராம் மெக்னீசியம், 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் 49 மில்லிகிராம் உள்ளது.

பருப்பு வகைகள்- உங்கள் உணவில் அனைத்து பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ் பருப்பில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. மெக்னீசியம் குறைபாட்டை குறிப்பாக கருப்பு பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் ஈடுசெய்ய முடியும். 1 கப் கருப்பு பீன்ஸில் 120 மி.கி மெக்னீசியம் உள்ளது.

முழு தானியங்கள் - அனைத்து முழு தானியங்களும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இது தவிர, பாதாம் வெண்ணெய், பயறு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் மெக்னீசியம் அதிகமாகக் காணப்படுகிறது. இதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை இவை.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive