இதில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த பேச்சில், அனைத்து முதுநிலை டாக்டர்களுக்கும், ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணைவிரைவில் வெளியிடப்படும் என, அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இதுகுறித்து, டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:அமைச்சருடன் நடந்த பேச்சில் சுமுகத்தீர்வு ஏற்பட்டுள்ளது. அரசாணை 293ன்படி, முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு, 5,500 ரூபாய்; 9,000 ரூபாய் என, இரண்டு வகையாக வழங்கப்பட்டு வந்தது.தற்போது, அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கும் ஒரே மாதியாக, 9,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பட்டய படிப்பு டாக்டர்களுக்கும் 5,000 ரூபாய் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பணி மூப்புக்கு ஏற்ப, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதுதொடர்பான, 354 அரசாணையை பரிசீலிக்க, கமிட்டி அமைக்கப்படும் என்றும், அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» முதுநிலை பட்ட டாக்டர்களுக்கு மாதம் ரூ.9,000 ஊக்கத்தொகை
முதுநிலை பட்ட டாக்டர்களுக்கு மாதம் ரூ.9,000 ஊக்கத்தொகை
முதுநிலை அரசு டாக்டர்களுக்கு,
மாதந்தோறும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அரசு உறுதியளித்து
உள்ளதாக, அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அரசு முதுநிலை பட்டப்படிப்பு
மற்றும் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான
பேச்சுவார்த்தை, அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் நேற்று
நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...