கண்காணிப்புப்பொறியாளர் அலுவலகம், நீவது., சிறப்பு திட்டவட்டம், கட்டுப்பாட்டிலுள்ள செயற்பொறியாளர், நீ.வ.து., சிறப்புதிட்ட அவிநாசி கோட்டம், அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) மற்றும் உதவி செயற்பொறியாளர், நீ.வ.து., சிறப்பு திட்ட உபகோட்டம் - 1 குன்னத்தூர் (திருப்பூர் மாவட்டம்) அலுவலகங்களில் காலியாக உள்ள இரண்டு (2) ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு (ஊதிய ஏற்ற முறை Level-8 (19500-71900)) தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதரதகுதியுள்ள நபர்தங்களது ஓட்டுநர் உரிமம், வயது சான்று, கல்வி சான்று, சாதி சான்று, குடும்ப அட்டைநகல், ஓட்டுநர் பணியில் மூன்றாண்டு முன் அனுபவச்சான்று மற்றும் உடற்தகுதிச்சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப் பொறியாளர், நீவது., சிறப்பு திட்ட வட்டம், அவிநாசி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 02-02-2024 ஆகும்.
காலிப்பணியிட விவரம்:-
1) பொதுப்பிரிவு (GT) -1 (முன்னுரிமை பெற்றவர்கள்) (கொரானா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் உரியசான்றுடன்)
2) பட்டியலினத்தவர் (அருந்ததியர்) (SC(A)) - 1 (ஆதரவற்ற விதவைகள்).
ஓட்டுநர் பணிக்கு தகுதிகள் :-
1.கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3.இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.நல்ல உடல் ஆரோக்கியமும், கண்பார்வையும் வேண்டும்.
5.01.07.2023 அன்று பொதுப்போட்டியில் குறைந்த பட்ச வயது 18,அதிகபட்ச வயது 32- க்கு மேற்படாமல் இருக்க வேண்டும் (ம)பட்டியலினத்தவர் (அருந்ததியர்) (SC(A)) குறைந்த பட்ச வயது 18, அதிகபட்ச வயது 37-க்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. காலதாமத்திற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளத
2023ஆம் ஆண்டு #TRB ஆல் நடத்தப்பட்ட ஒரே தேர்வு #BEO தேர்வு மட்டுமே, இதில் 2019-22ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களாக 33 மட்டுமே வெளியிடப்பட்டது. 2022-23 & முடியப் போகும் இந்த ஆண்டு 2023-24 காலிப்பணியிடங்களையும் இந்த #TRB_BEO தேர்வுடன் சேர்க்க குரல் கொடுக்க வேண்டும் ஐயா.
ReplyDelete