மகாத்மா காந்தி |
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள்:344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
விளக்கம்:
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்க பண்புகள் :1
1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.
பொன்மொழி :
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
பொது அறிவு :
1.அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?
2. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
English words & meanings :
Gasp. மூச்சுத்திணறல்
Gel. கூழ் போன்ற கரைசல்
Gaze கூர்ந்து பார்த்தல்
ஆரோக்ய வாழ்வு :
அகத்தி கீரை: அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
ஜனவரி 30
நீதிக்கதை
எதிரிக்கு இடம் தராதே
மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை.
இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.
அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து . அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன.
பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது."ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்" எனக் கேட்டது.
"நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்" என்றபடி கண்ணீர் விட்டது.
அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன.
"நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்" என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன.
பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின.. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன.
அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன.
பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது.
"புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்."
"என்ன அது சொல்" என்றன.
"உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே" எனக் கூறிச் சிரித்தது.
"அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்"
"பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்."
பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன.
நீதி : பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...