Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசாணை 243 : நாட்டாம தீர்ப்ப, நாம மாத்தி எழுதுவோம்ங்குறேன்! - செல்வ.ரஞ்சித் குமார்

அரசாணை 243 : நாட்டாம தீர்ப்ப, நாம மாத்தி எழுதுவோம்ங்குறேன்!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


அரசாணை 243ன் படி,


BT : 27561 (15%)


PHM : 34924 (20%)


SGT : 1,14,687 (65%)


என்ற 3 நிலை ஆசிரியர்களில், 15% ஆசிரியர்களுக்கு MHM பதவி உயர்வு தருகிறேன் என்ற பெயரில் 85% ஆசிரியர்களை இன்னலுக்குள்ளாக்கியுள்ளது.


இதில், இந்த 65% இ.நி.ஆ-களில் சிலர் தன்னிடமிருந்த கோவணமும் உருவப்பட்டுவிட்டதே என்பதைக் கூட உணராது, State Seniority வந்துவிட்டதே என்று போகி கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்குப் (BT Promotion) பொங்கலே கிடையாது என்பது பற்றிய கவலை இல்லை. இவர்களின் நினைப்பெல்லாம் நான் எப்புடியும் Primary HM ஆயிருவேன்ல என்பது மட்டுமே. அதுக்கெல்லாம் வாய்ப்பு மிக மிக மிகக் குறைவு என்பதைக் காலம் அவர்களுக்கு உணர்த்தும்.


பெண்ணாசிரியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தொடக்கக் கல்வித்துறையில், அவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் இருப்பிடத்தில் நிலைப்பெற்றுவிட்ட சூழலில், PP2000ஐ இழந்து பதவி உயர்வால் பந்தாடப்படக்கூடிய கூத்து என்பது 100% உவர்ப்பான உணவாகத்தான் இருக்கப் போகிறது.


தற்போதைய சூழலில், 243ஐ கொண்டாடும் ஆசிரியர்களின் மகிழ்ச்சி என்பது பிணங்களின் மீதமர்ந்து திருமணம் செய்வதைப் போன்றதே. இது சற்று கடினமான & கண்டனத்திற்குரிய சொல்லாடலாக இருந்தாலும், எதார்த்தநிலையை உள்ளபடியே சொல்ல எனக்கு வேறெந்த சொல்லாடலும் தெரியவில்லை.


15% பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வைத் தரும் அதே அரசாணையில் 65% இ.நி.ஆசிரியர்களின் பதவி உயர்வு பறிக்கப்பட்டதைப் பற்றிய கவலையோ அக்கறையோ துளியுமில்லை என்பதை இந்த 243ஐக் கொண்டாடித் தீர்க்கும் நபர்களின் செயல்கள் வெளிக்காட்டுகின்றன.


"ஏய் 19 வருசமா நாங்க போராடுனமே அப்ப எங்க போனீங்க?" என்று எதிர்க் கேள்வி கேட்கும் நபர்களில் அநேகர் தாங்களும் ஒரு காலத்தில் இ.நி.ஆசிரியராக இருந்து பட்டதாரியாகப் பதவி உயர்வு பெற்றோரே என்பதே இலாவகமாக மறந்துவிடுகின்றனர்.


"அட! அப்டீலாம் இல்ல, நாங்க State Seniority கொண்டு வந்ததைத்தான் கொண்டாடித் தீர்க்கிறோம்" என்றால். . . .  'State Seniority தான் வேண்டும்' என்றால். . . வாங்க எல்லா கோட்டையும் மொத்தமா அழிச்சு மாத்துவோம்.


நேரடி நியமனப் பதவிகளாக இருக்கும் SGT & BT பணியிடங்களுக்கு தலா 2 வெவ்வேறு பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைக்கும்படி,


SGT -> PHM & BT


PHM -> MHM ->  BEO -> DEO (E)


BT -> HSHM & PG


HSHM -> DEO (S)


PG -> HSSHM - > APO


DEO (S), DEO (E)  & APO -> CEO -> JD -> Director


என்று ஒட்டுமொத்த பதவி உயர்வையும் திருத்தச் சொல்லுவோம்.


"அதெப்புடி? அது வேற அலகு நாம வேற அலகு" என்றால், ஆசிரிய சமூகத்தின் ஒற்றுமையைத் (நம்பலேனாலும் அதான் நெசம்) தக்க வைத்த Union என்ற அடிப்படை அலகே சிதைந்து போன பின்னர், DEE. . . DSE. . . என்ற அலகுகள் மட்டும் எதற்கு? ஆக, மொத்தத் தீர்ப்பயும் திருத்தி எழுதுவோம்.


இது பார்க்க லூசுத்தனமா இருந்தாலும், கூறு கூறாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரிய சமூகத்தில் 243 என்ற புதுச் சிதைவை ஓரளவு சரி செய்ய, இதைவிட்டா . . . .


எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive