இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
விளக்கம்:
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
Live not to eat, but eat to live
உண்ண வாழாதே, வாழ்வதற்காக உண்
இரண்டொழுக்க பண்புகள் :1
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது. --மார்கஸ் ஆரேலியஸ்
பொது அறிவு :
1.ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?
2. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை கிராமம் எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
முருங்கை கீரை : முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது
ஜனவரி 12
1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது
நீதிக்கதை
தவறான வழிகாட்டி
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஊதாரியாக இருந்தான். தனது மூதாதையர் சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் விற்று வாழ்ந்து வந்தான். கடைசியில் அவனிடம் ஒரே ஒரு அழகான போர்வை மட்டும் எஞ்சியிருந்தது.
அவன் கோடை காலத்தில் மட்டுமே வெளியே வரும் தூக்கணாங்குருவி வகைப் பறவையை ஒருநாள் கண்டான்.
அவன் கோடை காலத்தில் மட்டுமே வெளியே வரும் தூக்கணாங்குருவி வகைப் பறவையை ஒருநாள் கண்டான்.
குளிர்காலம் முடிந்து விட்டது என்று எண்ணி வெளியே வந்திருந்த அந்தப் பறவை குளத்து நீரின் மேல் தத்தி விளையாடிய படி ஆனந்தமாக கீச்கீச் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அவன் கோடை காலம் வந்து விட்டது. ஆகவே இனி போர்வைக்கு வேலை இல்லை என்று எண்ணி அதையும் விற்றுத் தின்றான்.
ஆனால் குளிர்காலம் மீண்டும் வந்து விட்டது. குளிர் அதிகமாக இருந்தது. உறைபனி கொட்ட ஆரம்பித்தது. போர்த்திக் கொள்ளப் போர்வை இல்லாமல் அவன் வாடினான்.
ஒருநாள், அவன் சாலையில் அந்தப் பறவை இறந்து கிடப்பதைப் பார்த்தான். அவன் அதனிடம் சென்று, "அட, கேடு கெட்ட பறவையே... வசந்தம் வருவதற்கு முன்னதாக
வெளியே வந்து குளிரில் மாட்டிக் கொண்டு நீ இறந்ததும் அல்லாமல் என்னையும் இப்படி போர்வை இல்லாமல் குளிரில் வாடச் செய்து விட்டாயே” என்று புலம்பினான்.
நீதி : 'சும்மா கிடந்த சங்கை ஊதித் கெடுத்தானாம் ஆண்டி' என்பது பழமொழி. அதுபோல சும்மா இருந்தவனை கெடுத்தது அந்தப் பறவை. எனினும் நாம் நல்ல விஷயங்களை மட்டுமே முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...