திருப்பூர் குமரன் |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
விளக்கம்:
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
Live and let live
வாழு, வாழ விடு
இரண்டொழுக்க பண்புகள் :1
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
மற்றவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதே மிகவும் மதிப்புமிக்க விடயம். --ராபர்ட் பேடன் பவல்
பொது அறிவு :
1. "அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
2. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
முருங்கை கீரை: பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது
ஜனவரி 11
நீதிக்கதை
உயிரை இழந்த ஓநாய்
வயதின் காரணமாக தளர்ச்சி அடைந்த சிங்கம் நோய் வாய்ப்பட்டு எங்கும் செல்ல முடியாமல் குகைக்குள் அடைந்து கிடந்தது. தங்கள் அரசனான அதை எல்லா மிருகங்களும் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றன. நரி மட்டும் அந்தக் குகைப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தது.
அந்த நரிக்கும் ஒரு ஓநாய்க்கும் ஆகவே ஆகாது. அந்த ஓநாய் 'இதுதான் தக்க சமயம்; நரியைச் சிங்கத்திடம் மாட்டிவிட வேண்டும்' என்று எண்ணிக் கொண்டு சிங்கத்திடம் சென்றது.
"அரசே.... தாங்கள் யார் ? இந்தக் காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அரசன். எல்லா மிருகங்களும் உங்களைப் பார்த்து நலம் விசாரித்துச் செல்கின்றன. ஆனால் இந்த நரி மட்டும் இந்தப் பக்கம் வரவே இல்லை, பார்த்தீங்களா. அந்த அளவுக்கு அதற்குத் திமிர். அரசே. அதை நீங்கள் தண்டிக்க வேண்டும்" என்று அந்த ஓநாய் சிங்கத்திடம் சொல்லிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே வந்த நரியின் காதுகளில் ஓநாயின் வார்த்தைகள் விழுந்தன. "ஓஹோ... ஓநாய், என்னை மாட்டிவிடப் பார்க்கிறாயா? நான் உன் கதையையே முடிக்கிறேன்” என்று கறுவிக் கொண்டது.
ஆனால் எதுவுமே தெரியாதது போல் குகைக்குள் நுழைந்து சிங்கத்திற்கு வணக்கம் சொன்னது.சிங்கம் "என்ன நரியே, இப்போது தான் உனக்கு என்னைப் பார்க்க வர நேரம் கிடைத்ததாக்கும் ? என நரியிடம் உறுமியது.
உடனே நரி, "கோபிக்க வேண்டாம் அரசே. அவர்கள் எல்லாம் உங்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுத்தான் சென்றார்கள். அப்படி வாயால் நலம் விசாரித்துத் தங்களுக்கு ஆகப் போவது என்ன? ஆனால் நானோ என்ன செய்தேன் தெரியுமா?"
உங்கள் நோயைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவரைத் தேடி எட்டுத் திசையும் சென்று தங்கள் நோய்க்கு மருந்து என்ன ? என்று விசாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அதனால் தான் அரசே, இவ்வளவு தாமதமாகத் தங்களைப் பார்க்க வந்துள்ளேன் என்று போலி அடக்கத்துடன் சொன்னது.
சிங்கம், அவர்கள் என்ன மருந்து சொன்னார்கள்? என்று கேட்டது.
நரி, "ஒரு உயிருள்ள ஓநாயின் தோலை உரித்து, அதை உங்கள் உடம்பைச் சுற்றிப் போர்த்திக் கொள்ள வேண்டுமாம். அப்போது தான் உங்கள் நோய் குணமாகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள் அரசே" என்று சொன்னது.
உடனே சிங்கம் ஓநாயின் மீது பாய்ந்து தோலை உரிக்க ஆரம்பித்தது. வேதனையால் கதறிய ஓநாயிடம் நரி புன்னகைத்த படி "எஜமானனைக் கெடுக்கிற வேலையைப்
பார்க்காமல், நல்லது செய்கிற வழியைப் பார்க்க வேண்டும் என்றது.
நீதி : "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பழமொழிக்கு ஏற்ப
பிறருக்கு கேடு செய்ய நினைத்தாலே அது அவர்களுக்கே கேட்டை விளைவித்து விடும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...