பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
விளக்கம்:
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
Least said, sooner mended
யாகாவாராயினும் நாகாக்க
இரண்டொழுக்க பண்புகள் :1
1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும் முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
பொன்மொழி :
இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)
பொது அறிவு :
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சிறுகீரை பயன்கள் :உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள், என அனைவருக்கும் ஏற்ற கீரை இந்த சிறுகீரையாகும்..
நீதிக்கதை
கர்வம் கொள்ளாதே
இரண்டு கழுதைகள் முதுகில் சுமைகளை ஏற்றிக் கொண்டு ஒருவன் நகரத்துக்குப் புறப்பட்டான். ஒரு கழுதையின் முதுகில் தங்க கட்டிகளும், மற்ற கழுதையின் முதுகில் உணவிற்கான தானியமும் ஏற்றிக் கொண்டான்."
தானிய மூட்டை சுமை அதிகமாக இருக்கவே, பாரத்தைத் தாங்க முடியாமல் சுமந்து கொண்டு அந்தக் கழுதை நடந்தது. தங்கக் கட்டிகளைச் சுமந்து வந்த கழுதையோ பெருமிதத்துடன் நடந்து வந்தது.
தங்கத்தை சுமந்து வந்த கழுதை "என்ன நண்பனே பேசாமல் வருகிறாய். நடைப் பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, ஏதாவது பேசிக் கொண்டு வாயேன்" என்றது.
"உனக்கென்ன சுலபமாகக் கூறி விட்டாய். இந்த உணவு மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்து வருகின்றேன். எனக்கல்லவா வலி தெரியும்" என்றபடி மெதுவாய் நடந்து வந்தது. "அதுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது உன்னைக் காட்டிலும் நானே உயர்வானவன்" எனத் திமிருடன் பேசியது.
அதனுடன் இனி ஏதும் பேசுவதற்கில்லை என அமைதியானது நட்புக் கழுதை. அவர்களின் பயணம் காட்டு வழியே தொடர்ந்தது. பல திருடர்கள் சேர்ந்து வந்து வழி மறித்தனர். வணிகன் திருடர்களுடன் போராடிப் பார்த்தான் முடியவில்லை.
திருடர்கள் அனைவரின் கைகளிலும் பயங்கரமான ஆயுதம் இருந்தது. அதனால், வணிகன் மேலும் ஒன்றும் செய்யாமல் அமைதியானான்.
வணிகனைப் பிடித்து மரத்தில் கட்டிப் போட்டனர். சுமை அதிகம் இருக்கும் கழுதையைப் பிடித்து, சுமையில் என்ன பொருள் இருக்கிறது எனப் பார்த்தார்கள். தானியத்தையும், உணவையும் எடுத்துக் கொண்டு அக் கழுதையை விரட்டி விட்டனர்.
அடுத்த கழுதையின் முதுகில் என்ன இருக்கிறது எனப் பார்த்தார்கள். தங்கத்தைப் பார்த்ததும் திருடர்கள் அதை எடுக்க முயன்றார்கள்.
அப்பொழுது அக்கழுதை தன் முதுகிலிருந்து தங்கத்தை எடுக்கவிடாமல் அவர்களை கால்களால் உதைத்துத் தாக்கியது.கழுதையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டி திருடர்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களால் கழுதையைக் காயப்படுத்தினார்கள்.
ஒருவன் கத்தியால் அதனைக் குத்தி விட்டான் கழுதை துடிதுடித்து அந்த இடத்திலேயே விழுந்தது. திருடர்கள் தங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.
தன் கழுதை நண்பன் கீழே விழுந்து உயிருக்கு போராடுவதைக் 'கண்டு ஏதும் செய்ய முடியாமல் அடுத்த கழுதை தவித்தது. கீழே விழுந்து கிடந்த கழுதை "பார்த்தாய நண்பா கேவலம் தங்கம் வைத்திருக்கும் நான் தான் உயர்ந்தவன் எனத் திமிராகப் பேசினேனே! அதற்கு ஏற்ற பரிசு கிடைத்து விட்டது. என்னை மன்னித்து விடு" என்றதும் இறந்து விட்டது.
தன் நண்பன் இப்படி இறந்து விட்டானே என எண்ணி கழுதை கண்ணீர் வடித்தது.
நீதி: ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு,மனதில் நன்மையை நினைத்து நடந்தால் வாழ்வில் என்றும் தீமை நடக்காது.
இன்றைய செய்திகள்
Super
ReplyDelete