பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
விளக்கம்:
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய்
எண்ணப்படுவார்.
Learn ever from an enemy
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும் முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
பொன்மொழி :
புத்தாண்டு தினம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்தநாள்.’’
- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?
கன்னியாகுமரி
2. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?
பாத்திமா பீபி
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சிறுகீரை பயன்கள் : உடம்பில் ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை இந்த சிறுகீரைக்கு உண்டு. அத்துடன், காயங்களில் தொற்றுக்களை ஏற்படாமலும், தடுக்க உதவு புரிகிறது. அதனால்தான், சிறுகீரையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு, காயங்கள் உள்ள இடங்களில் தடவுவார்கள். இதனால், புண்கள் விரைவில் ஆறும்
ஜனவரி 04
லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.
உலக பிரெயில் நாள்
புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.
பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.
நீதிக்கதை
ஆமையும் இரண்டு வாத்துகளும்
அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.
ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.
“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் எனக் கூறின. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும் எனவே“ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கெட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை.
“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” எனவே வாய் திறக்காமல் வரவேண்டும் என வாத்துகள் கூறியது.
அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் திறக்காமல் வருகிறேன் என்று ஆமை கூறியது.
இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.
சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.அதனை கேட்டு கவனத்துடன் பிடித்து கொண்டது ஆமை.மூவரும் பத்திரமாக பக்கத்து ஏரிக்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
நீதி:ஆபத்தில் உதவ நல்ல நண்பர்கள் தேவை.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...