அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர் பணி விண்ணப் பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர், உதவி நுாலகர், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில், 232 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம், 29ம் தேதி துவங்கியது. இன்று முடிவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவின்போது, விண்ணப்பதாரின் மொபைல்போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., என்ற ஒரு முறை பதிவு எண் அனுப்பி, அதனை விண்ணப்பதாரர் பதிவு செய்ய வேண்டும்.ஆனால், இரண்டு நாட்களாக இந்த பதிவு எண் கிடைக்காமல், விண்ணப்ப பதிவை மேற்கொள்ள முடியாமல், பட்டதாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை, அண்ணா பல்கலை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...