கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்களில் கடந்த டிச. 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு,கலை அறிவியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில், பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளின் விவரங்களை சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதில், டிச.4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த பல்கலைக்கழக பருவத் தேர்வுகள், டிச.11 முதல் 16-ம்தேதி வரை நடைபெறும். விரிவான தேர்வுக்கால அட்டவணை உள்பட கூடுதல் விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...