தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம், அனைத்து சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பொது இடங்களில் முகமூடி அணியுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இருபது பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களாகவே, தமிழகத்தில் 10 பேருக்கும் குறைவாகவே கரோனா உறுதியாகிவந்தது. ஆனால், தற்போது இது இரண்டு மடங்காகியிருக்கிறது. எனவே, மக்கள் மீண்டும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டமான இடங்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 391 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் கரோனா உறுதியான விகிதம் (TPR) 6.2% ஆக இருந்தது. டிசம்பர் 13 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அதிகாரிகளுடனும், ஒரு காணொலி சந்திப்பை நடத்தியது.
அப்போது, மாநிலத்தில் கரோனா பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ஒருவேளை பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில், அதனை உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தியது.
உலகளவில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கைக்காக வழிகாட்டுதல்களை வெளியிடுமாறுடம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...