மழை வெள்ளம் பாதித்த
மாவட்டங்களில், பள்ளிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, சிறப்பு அதிகாரிகள்
நியமிக்கப்பட்டு உள்ளனர்.மிக்ஜாம் புயல் பாதிப்பால், சென்னை, செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இந்த வாரம் முழுதும்,
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வரும் 11ம் தேதி, பள்ளிகள்
மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதையொட்டி, பள்ளிகளின் சீரமைப்புக்கு, 1 கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வி துறை ஒதுக்கியுள்ளது.மேலும், பள்ளிகள் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, 10 இணை இயக்குனர்கள், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதலை, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.இன்று திறக்க தடைஇதற்கிடையில், பள்ளிகளை சீரமைத்த பின், 11ம் தேதி தான் திறக்க வேண்டும். இன்று எந்த தனியார் பள்ளியும் மாணவர்களை வரவழைத்து, பாடம் எடுப்பது கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...