ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :
மீண்டும்
பழைய ஓய்வூதியம், காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் போன்ற அரசு ஊழியர்,
ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலிகள் உள்பட பல்வேறு
கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோஜியோ
சார்பில் வருகின்ற டிசம்பர் 28 ந் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்
நடைபெறுகிறது.
இதில் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.
இந்த நேரத்திலாவது முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற வகையில் பகுதிநேர ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு
பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை,
வாழ்வியல்திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை ஆகிய பாடங்களில் ரூ.10 ஆயிரம்
சம்பளத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டாக பணி புரிகின்றனர்.
திமுக
ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என
தேர்தலின்போது இன்றைய முதல்வர் வாக்குறுதி கொடுத்ததை நினைவூட்டி
வருகின்றனர்.
அனைத்து
நாளும் முழுநேரம் வேலை, மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், பண்டிகை
முன்பணம், இறந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி போன்றவை வழங்கி, இந்த
வேலையை முறைப்படுத்தி, பணி பாதுகாப்பு கேட்டு வருகின்றனர்.
திமுக
ஆட்சிக்கு வந்து முதல் முறையாக சம்பள உயர்வு ரூ.2500 வழங்கப்படும் என
பள்ளிக்கல்வி அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்ததுகூட இதுவரை
வழங்கவில்லை.
எனவே முதல்வர் ஆணையிட்டு சம்பள உயர்வு, பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
இதனை ஜாக்டோஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்துவோம்.
*************************
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...