ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ( தொடக்கக் கல்வி ) சங்கத்தின் சார்பில் தங்களது மதிப்பூதியத்தினை ரூ .20,000 / -லிருந்து ரூ .25,000 / - ஆக உயர்த்தி வழங்கிடவும் , காலமுறை ஊதியம் வழங்கிடவும் , பணியினை நிரந்தரம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் அளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் , மாற்றுத்திறன் மாணவ , மாணவிகளின் நலன் கருதி , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 இன்படி , மாற்றுத்திறனுடைய பள்ளி வயதில் உள்ள அனைத்து மாணவ , மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கை அளித்தும் அவர்களின் மாற்றுத்திறன் தன்மையை பொறுத்து அவர்களுக்கான சிறப்புக் கல்வியும் , சிகிச்சை 1 பயிற்சிகளும் சிறப்பு பயிற்றுநர்களால் ஆயத்த பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் தற்பொழுது தொடக்கக் கல்வி நிலையில் 1995 சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள் . தொடக்கக் கல்வி நிலையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியம் குறித்து பின்வரும் விவரங்களை தெரிவித்துள்ளார் .
GO NO : , DATE : 07.12.2023 - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...