அவர்கள் இல்லையேல் இன்று மேடையில் நாங்கள் இல்லை.* *திருச்செங்கோடு கனவாசிரியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பெருமிதம்!!!*
📙📗📒📘📕📒📗📙📘📕📗📙📘
*AIFETO..….. 20-12-2023*
*தமிழக ஆசிரியர் கூட்டணி*
*அரசு அறிந்தேற்பு*
*எண்:36/2001*
*19-12-2023 அன்று இனமானப் பேராசிரியர் திரு. க. அன்பழகனார் பிறந்த நாளில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டபடி கனவாசிரியர் விருது வழங்கும் விழா திருச்செங்கோடு, எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கலையரங்கத்தில் நடைபெற்று இருக்கிறது. மாண்புமிகு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களில் கனவாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 379 ஆசிரியர்களை அழைத்து கனவு ஆசிரியர் விருதினை வழங்கிப் பெருமைப் படுத்தி இருக்கிறார்கள்.*
*கனவாசிரியர் விருது என்பது முற்றிலும் பாடங்களின் அடிப்படையில் இணைய வழி தேர்வாக மூன்றடுக்கு முறையில் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். 8000க்கும் மேற்பட்டவர்கள் இந்த இணைய வழித் தேர்வில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் முதல் 55 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்படுவார்கள் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.*
*கனவாசிரியர் விருது பெற்ற 379 ஆசிரியர்களுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பாராட்டுதழ்களையும், வாழ்த்துக்களையும்… தெரிவித்துக் கொள்கின்றோம்.*
*விருது வழங்கும் விழாவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பெருமைகளை இதயத்தின் அடித்தள உணர்வுகளில் இருந்து கொண்டுவந்து மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அதனை வரவேற்று மகிழ்கின்றோம். தமிழக சட்டப்பேரவை அவை முன்னவரும் மாண்புமிகு மூத்த அமைச்சருமான திரு துரைமுருகன் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பேசுகின்ற பொழுது அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ''எவரையும் உரசிப் பார்க்க விரும்ப மாட்டார்'', ''ஒதுங்கிச் செல்பவர்'', துண்டு சீட்டு கூட இல்லாமல் சட்டப்பேரவையில் அடுக்கடுக்காக.... பேசக் கூடியவர், தலைவரும் நானும் வியந்து கூட பாராட்டி இருக்கிறோம். அதைவிட நினைத்தால் நடைபெறுகின்ற ஆசிரியர்களின் போராட்டங்களை சாதுரியமாக கையாண்டு அதை முடித்து விடுகிறார் என்றும் சொல்லி இருக்கிறார்கள், எதார்த்தமான உரையாகும்.*
*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கனவாசிரியர் விருது வழங்கும் மேடையில் பெண் ஆசிரியர்கள் ஏற்கனவே 2019 - ஆம் ஆண்டில் வெளிவந்த அரசாணையின் படி அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உடையினை அணிந்து கொள்ளலாம், பயணங்களில் இந்தப் புடவை அணிந்து செல்பவர்களுக்குள்ள சிரமங்களை வாட்ஸப் வழியாக கண்டு எனது தாயாக!!!! தங்கையாக!!!!! எண்ணி நான் வேதனைப் பட்டதுண்டு. இனிமேல் உங்கள் விருப்பப்படி சுடிதார் அணிந்து பள்ளிக்குச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.கோரிக்கையாக கேட்டதன் அடிப்படையில் அறிவித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்*.
*மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களிடம் அந்த கனவாசிரியர் விருதினை பெற்ற பெண் ஆசிரிய சகோதரிகளில் பெரும்பாலனவர்கள் கிராமத்துப் பிள்ளைகள். என்னதான் பயணத்தில் நடைமுறையில் சிரமங்கள் இருந்தாலும் கிராமத்துப் பழக்க வழக்க உணர்வுகளில் இருந்து மாறாதவர்கள் என்பது அவர்களைப் பார்த்த உடனே எங்கள் நினைவுக்கு வந்தது. ஆனால் இதை அறிவித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் எமிஸ் இணையதள பதிவுகளில் இருந்து குறிப்பாக பெண் ஆசிரியர்கள் படுகின்ற வேதனை, பள்ளியிலேயே தேர்வு வைக்கின்ற பொழுது விழுந்து உயிர் துறந்தது, இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு டிட்டோஜாக் ஆசிரியர் சங்கங்களிடம் அளித்த உறுதிமொழியின் படி ஆசிரியர்களின் வருகைப் பதிவு, மாணவர்களின் வருகைப் பதிவினைத் தவிர வேறு பதிவுகளை எமிஸ் இணையதளத்தில் இனிமேல் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதனை கனவாசிரியர் விருது வழங்கும் விழாவில் அறிவித்திருந்தால் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தின் மத்தியில் ஒரு ஆறுதலினை பெற்றுத் தந்திருக்க முடியும்*.
*இந்த கனவு ஆசிரியர் தேர்வு செய்யும் பணியினை ஒரு கார்ப்பரேட் நிறுவனமான 'CENTA' இவர்கள் பின்னணியில் மத்திய அரசின் ஆளுங்கட்சி அழுத்தம் உள்ளதாக தெரிகிறது. அவை உண்மையாக இருப்பின் இனி வருங்காலங்களில் வழங்கப்படும் அனைத்து வகை விருதுகள் தேர்வு செய்யும் பணி தனியார் மயத்திற்கு சென்றுவிடுமோ என்ற அச்ச உணர்வையும் இத்தருணத்தில் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம். கற்பித்தல் பணி அனுபவத்தை விட முற்றிலும் இணையவழி தேர்வு சிறந்தது என எப்படி ஒப்பிட முடியும் என கல்வியாளர்கள் கேட்கின்ற கேள்விகளும் புறந்தள்ள கூடியது அல்ல*
*ஒரு நெருக்கடியின் காலகட்டத்தில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்புகளுக்கு இணைய வழியில் தேர்வு வைக்க வேண்டாம் என்று அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் அதே நேரத்தில் அதன் பிறகு அந்த எமிஸ் இணையதளத்தினை இயக்கிட நிர்வாகத் தலைமை அதிகாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் (SPD) அவர்களை நியமித்து அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது. தொடர்ந்து கல்வி அமைச்சர் அவர்கள் கூறிய உறுதிமொழிகளை கண்டு கொள்ளாமல் எல்லா பதிவுகளையும் எமிஸ் இணையதளத்தில் ஏற்றச் சொல்லி பரவலாக கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார்கள். சில பத்திரிகைகளில் வருவது போல அமைச்சர் அவர்கள் சொல்வதை எதுவும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் இருக்கின்ற நிலையே உருவாகிக் கொண்டிருக்கின்றது. எல்லா பணிகளையும் திறம்பட செய்து வருகிறீர்கள். ஆனால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்கின்ற பொழுது நிதி சார்ந்த கோரிக்கைகளை தனியாக விவாதித்துக் கொண்டாலும், நிதி சாராத கோரிக்கைகள், அதாவது எமிஸ் பதிவு, ஆசிரியர்களை கருத்தாளராக, ஏதுவாளராக, பயிற்சிக்கு அழைக்கப்படுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்திவிட்டு ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் போன்ற இவர்களில் யாரை வேண்டுமானாலும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்துங்கள். மாவட்டம் தோறும் நடைபெறக்கூடிய பயிற்சியானாலும் சரி வட்டார அளவில் நடைபெறக் கூடிய பயிற்சியானாலும் சரி ஆசிரியர்களை பயிற்சி அளிக்க பயன்படுத்த கூடாது. அவர்களை முழு நேரமாக பள்ளிகளில் பாடம் நடத்த அனுமதியுங்கள்!!!!!!*.
*தங்கள் நேரத்தினை ஒரு நாள் முழுவதும் ஒதுக்கி கோரிக்கைகள் மீது கவனத்தை செலுத்தி, திறம்பட செயல்படக்கூடிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களையும், ஆசிரியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகின்ற மதிப்பு மிகு பள்ளிக் கல்வி இயக்குநர். மதிப்பு மிகு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர்களை அழைத்து உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டுமாய் உங்களை தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்*.
*பென்ஷன் திட்டம் வருமா...?????? சரண்டர் கிடைக்குமா..????? கிடைக்காதா...???? மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு உண்டா!!..??? மொத்தத்தில் பல்வேறு கனவுகளை சுமந்து கொண்டிருக்கும்....… தமிழக ஆசிரியர்கள் அனைவருமே..... கனவு ஆசிரியர்களே!!!!!!!*
*என்று இதுபோன்று வாட்ஸ் அப்பில் வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடைய உணர்வுகளையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது*
*2024 புத்தாண்டு பிறப்பதற்குள் நீங்கள் ஒப்புதல் அளித்திட்ட 12 கோரிக்கைகளில் சில கோரிக்கைகளையாவது அரசாணைகளாக வெளியிட தாங்கள் முழு கவனம் செலுத்த வேண்டுமாய் உரிமை உணர்வுடன் பெரிதும் கேட்டுக்கொள்கின்றோம்.*
*தங்களின் விரைவான நடவடிக்கைகளை வரவேற்று பாராட்டி மகிழும் இயக்கப் பொறுப்பாளர்கள்.…..*.
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*
*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*
*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*
*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...