இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள் சாா்பில் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சங்கத்தின் உறுப்பினா்களிடம் ஆலோசிக்காமல் நிா்வாகிகளின் தனிச்சையான இந்த முடிவுக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் எதிா்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக அரசு ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களாக பணிபுரிந்து வருகிறோம். சங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும், தனி நபரின் கருத்தைக் கேட்காமல், தங்களின் சுய விளம்பரத்துக்காக சில நிா்வாகிகள் முதல்வரின் நிவாரண நிதி தொடா்பாக தனிச்சையாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனா்.
அரசு ஊழியா்களின் பிரதான கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயா்வு, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணப்படவில்லை. தோ்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை, ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், அரசு ஊழியா்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனா்.
அரசின் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் மாற்றுக் கருத்தில்லை. முதல்வரின் நிவாரண நிதி வழங்க விருப்பக் கடிதம் வழங்கும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் மட்டுமே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் ஊதியத்திலும் பிடித்தம் செய்ய வேண்டும். சங்க நிா்வாகிகளின் தனிப்பட்ட விருப்பத்தை, ஒட்டுமொத்த ஊழியா்களும் ஏற்க முடியாது என்றனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...