Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை துறைமுக பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் வேலை



சென்னை துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Post Graduate Teacher (PGT) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.


சென்னை துறைமுக பள்ளி காலிப்பணியிடங்கள்:



தற்போது வெளியான அறிவிப்பின் படி, Post Graduate Teacher (PGT) பணிக்கு என 03 பணியிடங்கள் சென்னை துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ளது.



Post Graduate Teacher கல்வி தகுதி:

Post Graduate Teacher (PGT) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.Com / M.Sc (Physics) / MA (Tamil) + B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.



Post Graduate Teacher வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Fresher ஆக இருப்பின் 40 வயதுக்குள் உள்ளவராகவும், ஓய்வு பெற்ற ஆசிரியராக இருப்பின் 64 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.



Post Graduate Teacher சம்பளம்:

Post Graduate Teacher (PGT) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.



Post Graduate Teacher தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Graduate Teacher விண்ணப்பிக்கும் முறை:

Post Graduate Teacher (PGT) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் secy@chennaiport.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive