மாநில பொருளாளர் முருகசெல்வராசன் பேசினார்.இதில், திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் தவறான தணிக்கை தடையை நிவர்த்தி செய்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் தனி ஊதியம், 500 சிறப்புப்படி தொடர்ந்து வழங்க வேண்டும். தவறான தணிக்கை தடையை நிவர்த்தி செய்து, தேர்வுநிலை இடைநிலை தலைமையாசிரியர்களுக்கு, 5,400 ரூபாய் தர ஊதியம் வழங்க வேண்டும்.
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை சமன் செய்து, இளையோருக்கு இணையான ஊதியம் பணிமூப்பு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தகவலறிந்து வந்த நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், மல்லசமுத்திரம் யூனியன் ஆசிரியர்களின், 12 அம்ச கோரிக்கைகளுக்கும் எதிர்வரும், 2024 ஜன., முதல் வாரத்தில் முழுமையான தீர்வு காணப்படும் என்று எழுத்துப்பூர்வமாக மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தெரிவிப்பர் என, நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் தெரிவித்தார். இதனடிப்படையில், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...