பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பாக,
"தருமபுரி,
கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே புதிய ஆசிரியர்களை
நியமனம் செய்யும்போது இந்த மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
புதிய
நியமனம் பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணியிட மாறுதல்
வழங்கக்கூடாது. எந்த இடத்தில் பணியில் சேருகிறார்களோ, அந்த இடத்தில் 5
ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
கூடுதலாக உள்ள
பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல்
வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள்
முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும்." என
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...