தேசிய கணித தினம் |
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
விளக்கம்:
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
Knowledge is power
அறிவே ஆற்றல்.
இரண்டொழுக்க பண்புகள் :1
.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்
பொன்மொழி :
பொறாமை என்பது
அடிமைகளின் குணம்..
வாழ்வில் உயர
வேண்டுமானால்
அந்த குணத்தை
முதலில் அழித்துவிடு.
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?
2. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்
திருமதி.ஜானகி ராமச்சந்திரன்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கருஞ்சீரகம் ஒரு அருமருந்தாகும். இதில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல் தன்மை கல்லீரல், இரப்பையில் ஏற்படும் தொற்றை குணப் படுத்தும்
டிசம்பர் 22
தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]
இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
நீதிக்கதை
குறை இல்லாதவர் இல்லை
ஒருநாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் செய்தது. மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள். அதற்கு முன் தோன்றி காட்சி தந்தார்.
"அழகிய மயிலே, உன் தவத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்தோம். உன் தவத்தின் நோக்கம் என்ன சொல்," எனக் கேட்டார் கடவுள்.
"கடவுளே தங்களை வணங்குகிறேன். எனக்கு நீண்ட நாள் ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது.'"
"சொல் கேட்கிறேன்" ஆதரவாகப் பேசினார் கடவுள், "என் குரலே எனக்குப் பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.
"அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல். நீ தான் பறவைகளில் அழகானவன். உன் கழுத்து அழகும், தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்காவது படைக்கப்பட்டுள்ளதா? நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா!" என கடவுள் சொன்னாலும், மயில் சமாதானம் அடையவில்லை.
"நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான். இருப்பினும் என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா" என்றது."எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது. குறை நிறை இருக்கத்தான் செய்யும். நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே. கழுகு வலிமையானது. குயில் பாடும் திறன் பெற்றது. கிளி பேசும் ஆற்றல் கொண்டது. உனக்குத் தான் அதிகம் தகுதிகள் உள்ளன. எனவே அதை எண்ணிப் பெருமைப்படு" என்று மறைந்தார் கடவுள்.
நீதி : குறைகளையே காலம் முழுவதும் நினைத்துக் கொண்டு இருக்காமல், தன் நிறைகளை அறிந்து, அதை மேலும் நன்கு வளர்த்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே இனிய வாழ்க்கை ஆகும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...