சவுதி அரேபியா எண்ணெய் வயல் |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
குறள்:324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
விளக்கம்:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
Jack of all trade is master of none
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.
பொன்மொழி :
நாம் எதை தொடர்ந்து
செய்கிறமோ அதுவாகவே
மாறுகின்றோம்.. எனவே
திறமை என்பது
ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்.
பொது அறிவு :
1. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?2. செவாலியர் என்ற விருதை வழங்கும் நாடு எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
இலுப்பை பூ : எண்ணெய் வலி நிவாரண மருந்தாகவும் பயன்படுகிறது. சவர்க்காரம் தயாரிக்கவும், கோவில்களில் விளக்கு எரிக்கவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
துரோகியின் நட்பு வேண்டாம்.
காட்டு ராஜா சிங்கம் இரை தேடிக் கொண்டிருந்தது. சிங்கம் நல்ல பசியுடன் இருந்தது. அவ்வழியே வந்த ஓநாய் ஒன்று சிங்கத்தின் கண்களில் பட்டுவிட்டது.
ஓநாயைப் பார்த்ததும் சிங்கம் கர்ஜித்தது. "ஏய் நில் அப்படியே” என மிரட்டியது. ஓநாய் பயந்து நடுங்கி நின்றபடி "மகாராஜா வணக்கம்" என்றது.
"உன்னிடம் நான் வணக்கத்தைக் கேட்கவில்லை என்றது சிங்கம். மீண்டும் கர்ஜித்தது.
"வேறு என்ன ராஜா வேண்டும்" என்றது ஓநாய்.
"எனக்குப் பசியாக இருக்கிறது. அதனால் உன்னைக் கொன்று சாப்பிடப் போகிறேன்" என்றதும், ஓநாய் அலறியது.
"அய்யோ, மகாராஜா, நான் மிகவும் சிறியவன். உங்கள் பசிக்குப் போதாது. நான் வரும் வழியில் முரட்டுக்குதிரை மேய்ந்து கொண்டு இருக்கிறது. அதை எப்படியாவது அழைத்து வருகிறேன். அதைக் கொன்று சாப்பிடுங்கள். தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள்" எனக் கெஞ்சியது ஓநாய்.
"சரி அப்படியே செய். என்னை ஏமாற்றி விட்டு ஓட மட்டும் முயலாதே" என கர்ஜித்து. ஓநாயை விரட்டிவிட்டது சிங்கம்.
தப்பித்தோம் பிழைத்தோம் என தலை தெறிக்க ஓடியது ஓநாய். முரட்டுக் குதிரை இருந்த இடத்தை அடைந்தது. அதனிடம் ஓநாய், "குதிரையே ஒரு அழகான மேய்ச்சல் நிலம் பார்த்து வந்தேன். என்னுடன் வந்தால் உனக்குக் காட்டுகிறேன். பசும் புல்வெளி உள்ள இடம்" என ஆசை வார்த்தை காட்டியது.
ஓநாயின் பேச்சை உண்மை என நம்பிய குதிரை அதன் பின்னால் ஓடி வந்தது. ஓநாயின் திட்டப்படி, குதிரை
ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொண்டது. குதிரையினால் மேலே வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. எனவே அதனால் தப்பித்துச் செல்லவும் முடியாது.
ஒநாய் நேரே சென்று சிங்கத்தை, குதிரை இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது. குதிரை எங்கும் இனி தப்பிச் செல்ல முடியாது, பிறகு பார்த்துக் கொள்வோம் என எண்ணிய சிங்கம், "ஓநாயே, நீ உயிர் பிழைக்க, மற்றொரு மிருகத்தைக் கொல்லச் சொல்லிக் காட்டிக் கொடுக்கிறாயே, நீ ஒரு நம்பிக்கைத் துரோகி. உனக்காக எதையும் நீ செய்வாய். உன்னைப் போன்றவர். உயிருடன் இருக்கக் கூடாது." என்றவாறே ஓநாய் மீது பாய்ந்து கொன்றது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
நீதி: நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீமையை நினைத்தால் தீமை தான் நடக்கும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...