மகாகவி சுப்பிரமணிய பாரதியார் |
பால் :அறத்துப்பால்
அதிகாரம் : இன்னாசெய்யாமை
குறள்:317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
விளக்கம்:
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
Hoist your sail when the wind is fair
கற்றுள்ள போதே தூற்றிக் கொள்
இரண்டொழுக்க பண்புகள் :1
1.நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.
2. துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .
பொன்மொழி :
உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள் – இங்கிலாந்து
பொது அறிவு :
1. எந்த ஆண்டு ஜன-கன-மன முதலில் பாடப்பட்டது?
2. இந்திய கடற்படை தினத்தை நாம் எப்போது கொண்டாடுகிறோம்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
ஆவாரம் பூ: ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ.
ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.
டிசம்பர் 11
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்
பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
பன்னாட்டு மலை நாள்
பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.[1]
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.
நீதிக்கதை
சேந்தங்குடியில் டேவிட் என்ற சிறுவன் இருந்தான். குறி தவறாமல், கவண் கல் எறிவதில் வல்லவன். இருட்டுக்கும் பேய்க்கும் பயப்படாதவன்.
ஆனாலும், அவனைப் பாராட்டுவோரும் இல்லை. நட்புடன் விளையாடவும் யாரும் இல்லை.
அவனது பரிகாசப் பேச்சு மற்றவர்களைத் தொல்லைக் குள்ளாக்கும். அவனது சில்மிஷ விளையாட்டுகளும் தான் அதற்குக் காரணம்.
டேவிட்டுக்கோ, ஜெனி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு எண்ணம்.
ஜெனியும் சேந்தங்குடியில் தான் வசித்து வந்தாள். அன்பும் அறிவும் ஒருசேரப் பெற்ற அவளுக்கு ஊர்க்குழந்தைகள் அனைவரும் நண்பர்கள்தான்.
எப்போதும் ஏதாவது புத்திசாலித்தனமாகச் செய்து பெயர் வாங்கி விடுகிறாள் ஜெனி. அவளுக்குத் தான் எவ்வளவு நண்பர்கள் … டேவிட் எரிச்சலுற்றான்.
ஜெனியின் நண்பர்களைப் பிரித்து அவளை வெற்றி கொள்ள வேண்டும் என நினைத்தான்.
ஜெனியின் நண்பர்களான வரதனிடமும் சிவாவிடமும் சென்று, “நீங்கள் ஏன் ஜெனியுடன் மட்டும் நட்பாக உள்ளீர்கள் ? நானும் திறமையானவன் தான் “ என்றான்.
இதோ பாருங்கள் என் திறமையை எனச் சொல்லியபடி, தூரத்தில் வந்து கொண்டு இருந்த ஒரு மூதாட்டியின் பானை மீது கவண்கல் எறிந்து, பானையை உடைத்தான்.
ஜெனி அங்கு வந்தாள்.டேவிட் ஏன் பானையை உடைத்தாய் ? பாட்டி தயிர் வியாபாரம் செய்ய இருந்த ஒரு பானையையும் உடைத்துவிட்டாயே ?
“திறமையை நற்செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும், டேவிட் என்றாள்.
“ஜெனி அங்கே பார், அச்சிறுமியின் கையில் இருக்கும் பட்சணத்தை அந்த வெறிபிடித்த நாய் பிடுங்க வருகிறது. “வரதன் சொல்லி முடிக்கும் முன், ஜெனி ஒரு கல் எடுத்து அந்த நாயின் அருகே வீசினாள்.
நாய் வேகமாய் நகர்ந்து ஓடியது.
சிறுமி சந்தோஷமாக துள்ளிக் குதித்துச் சென்றாள்.
”யாரடா என் பானையை உடைத்தவன்?” என கர்ஜித்தபடி வந்தாள் மூதாட்டி.
“பாட்டி, தெரியாமல் கல் தங்கள் பானை மேல் பட்டுவிட்டது. மன்னியுங்கள். ஒரு நல்ல பானை காலையில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்” என்றாள் ஜெனி.
“மகராசி, நீ நல்லா இரும்மா” என வாழ்த்தினார் பாட்டி.
“டேவிட் நம் திறமை மற்றவர் நம்மை போற்றும்படி இருக்க வேண்டும்… தூற்றும்படி அல்ல…”
“புரிந்து கொண்டேன் , ஜெனி"
“நாம் எல்லோரும் ஒன்றாக நண்பர்களாக இருப்போமே ? நமக்குள் என்ன பகை ?” என்றாள் ஜெனி.
“வா, டேவிட் நாவல் மரத்தடிக்குச் சென்று விளையாடலாம்” என சிவாவும் வரதனும் சொன்னார்கள்.
அக்கணம் முதல் டேவிட்டும் ஜெனியின் நண்பர்கள் குழுவில் ஐக்கியமானான்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...