சில்கா ஏரி |
இயல்:துறவறவியல்
அதிகாரம் : இன்னாசெய்யாமை
குறள்:316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
விளக்கம்:
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
Hitch your wagon to a star
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
இரண்டொழுக்க பண்புகள் :
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
ஒரு வேளை உணவை இழத்தல் என்பது 100 வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது – ஸ்பெயின்
பொது அறிவு :
1.இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி எது?
2. இந்தியாவின் மிக நீளமான கால்வாய் எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பாரிஜாத பூக்கள்: பாரிஜாத பூக்களின் எண்ணெய், மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்துக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. பவளமல்லியின் வாசம், உங்கள் மூளையில் செரோட்டோனின் சுரக்க உதவும். இது உங்கள் பதற்றத்தை குறைத்து, அமைதிப்படுத்தும்.
நீதிக்கதை
The Lark & Her Young Ones – மைனாவும் அதன் குஞ்சுகளும் :- ஒரு ஊருல ஒரு பெரிய கோதுமை வயல் இருந்துச்சு.அந்த கோதுமை வயலுக்கு நடுவுல ஒரு மைனா கூடுகட்டி குஞ்சு பொரிச்சிருந்துச்சு.அந்த குஞ்சுகள் ரொம்ப சின்னதா இருந்ததால அதுங்களால பறக்க முடியல. அம்மா மைனா கொடுக்குற சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்துகிட்டு இறுந்துச்சுங்க.
ஒருநாள் அந்த கோதுமை வயலோட முதலாளி அங்க வந்தாரு ,கோதுமை எல்லாம் ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு உதவிக்கு யாராவது கிடைச்சா நாளைக்கே அறுவடை செஞ்சிடலாம்னு சொன்னாரு. அத கேட்ட மைனா குஞ்சுகள் ரொம்ப பயந்து போச்சுங்க அடடா கோதுமைய அறுவடை செஞ்சா நம்ம கூட்டையும் பிச்சி போட்டுடுவாங்க நமக்கு ஆபத்துனு சொல்லுச்சுங்க.
அத கேட்ட அம்மா மைனா பயப்படாதீங்க நாளைக்கு அறுவடை செய்ய மாட்டாங்கன்னு சொல்லுச்சு.அதுமாதிரியே மறுநாள் அந்த விவசாயி அறுவடை செய்யவே இல்ல.
கொஞ்ச நாளுக்கு அப்புறம் அங்க வந்த விவசாயி பக்கத்து ஊருல இருந்து வேலைக்கு ஆட்களை வரவச்சு நாளைக்கு அறுவடை செய்யலாம்னு சொன்னாரு. அத கேட்ட மைனா குஞ்சுகள் திரும்பவும் பயந்து போச்சுங்க ,அவுங்க அம்மா கிட்ட நாம வேற எங்கயாச்சும் போய்டலாமான்னு கேட்டுச்சுங்க.
அதுக்கு அந்த அம்மா மைனா சொல்லுச்சு ஒன்னும் பயம் இல்லை. நாளைக்கும் அறுவடை நடக்காதுனு சொல்லுச்சு. அதே மாதிரியே மறுநாளும் அறுவடை நடக்கல.
கொஞ்ச நாளுக்கு அப்புறமா அங்க வந்த விவசாயி ரொம்ப காலம் தாழ்த்த கூடாது. அதனால நாமளே அறுவடை செஞ்சிடலாம்னு சொன்னாரு. அத கேட்ட அம்மா மைனா சொல்லுச்சு, ஆபத்து குழந்தைகளா யாரையும் நம்பாம தன்னோட வேலைய தானே செய்ய அந்த விவசாயி முடிவெடுத்துட்டாரு,
அதனால எல்லாரும் மெதுவா என்னோட நடந்து வாங்கனு சொல்லி அந்த கூட்ட விட்டு பக்கத்துல இருக்குற புதருக்குள்ள பாதுகாப்பா எல்லா குஞ்சுகளையும் கூட்டிட்டு போயிடுச்சு, அந்த மைனா.
நீதி : தன் கையே தனக்குதவி.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...