Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் - செய்தி வெளியீடு 21.11.2023

 



 

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024 - ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ( Ph.D ) பயிலும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள் , " இயக்குநர் , ஆதிதிராவிடர் நல , இயக்குநரகம் , எழிலகம் ( இணைப்பு ) , சேப்பாக்கம் , சென்னை -600 005 " என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும் . மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive