நெட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நெட் தேர்வு:
இளநிலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு தகுதியுள்ள உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பொருட்டு வருடத்திற்கு இரண்டு முறை தேசிய தோ்வுகள் முகமை சார்பில் நெட் தேர்வு நடத்தப்படுகிறது. 82 பாடங்களில் இந்த நெட் தேர்வு நடத்தப்படும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய பாடத்திட்டத்தை அமைப்பதற்காக நிபுணா் குழு ஒன்று அமைக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் அறிவித்துள்ளார். இவ்வாறு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...