(AY 2024-25)
ஒரு சில கருவூலங்களில் Advance Tax பிடித்தம் செய்ய ஓய்வூதியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அறிகிறோம்.
எனவே வருமான வரி (Income Tax)
செலுத்துவது தொடர்பாக
ஓய்வூதியர்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
பழைய திட்டம் / புதிய திட்டம்
என இரு வகைகளில் வருமான வரி திட்டம் தற்போது அமுலில் உள்ளது.
முதலில் பழைய திட்டம் பார்ப்போம்.
*60 வயதுக்குள்*
ரூ 2.50 லட்சத்திற்குள் வரி விகிதம் இல்லை.
ரூ 5 லட்சம் வரை:5%
ரூ 10 லட்சம் வரை:20%
ரூ 10 லட்சத்திற்கு மேல்..30%
*60 முதல் 80 வயதுக்குள்*
ரூ 3 லட்சம் வரை......இல்லை.
ரூ 5 லட்சம் வரை:5%
ரூ 10 லட்சம் வரை:20%
ரூ 10 லட்சம் மேல்....30%
*80 வயதிற்கு மேல்*
ரூ 5 லட்சம் வரை......இல்லை.
ரூ 10 லட்சம் வரை:20%
ரூ 10 லட்சம் மேல்:30%
சுருக்கமாக புரிந்து கொள்ள......
மாத ஓய்வூதியம் ரூ 46475/-க்கு கீழ் பெறுபவர்களுக்கு T.D.S.பிடித்தம் வராது.
( Standard Deduction ரூ50 ஆயிரம் கணக்கில் எடுத்துக்கொண்டு)- (வயது வித்யாசம்
இல்லை -)
மீறி பிடித்தம் செய்தால் கருவூல அலுவலருக்கு கடிதம் கொடுக்கவும்.
*புதிய திட்டம்*
பழைய திட்டத்தில் உள்ளவர்கள் புது திட்டத்திற்கு வர விருப்பம்
தெரிவித்து வரலாம். கருவூல அலுவலருக்கு கடிதம் கொடுத்தால் போதுமானது.
வயது வரம்பு கிடையாது.
பழைய திட்ட சலுகைகள்
புது திட்டத்திற்கு கிடையாது.
ரூ 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ( Standard Deduction Rs.50 thousand can be
availed)
குடும்ப ஓய்வூதியர்களுக்கு
(பழைய & புதிய திட்டங்கள்) வருமான வரி கிடையாது.
T.D.S.பிடித்தம் செய்ய முடியாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...