பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் 01.01.2016 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்களை உட்படுத்தி கோரப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த ஆணைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது,
இதனால் , 01.01.2016 நிலவரப்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பட்டியலில் இடம் பெற்ற பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் அனைவரையும் விடுவித்து மீண்டும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கே அனுப்பி வைக்க வேண்டும் . அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் , நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பில் சில மாற்றங்களைச் செய்யுமாறு ( clarification petition ) மனு தாக்கல் செய்யப்பட்டது . தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில் , 01.01.2016 முதல் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றது செல்லாது என்பதால் சுமார் 1300 பேர் மீண்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கே பணிமாறுதல் செய்யப்பட உள்ளனர். சார்நிலைப் பணி விதி 9 ன் படி அவர்களுக்கு இரண்டாவது முறையாக பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தின் மூதுரிமையைப் பயன்படுத்தி இன்னொரு பணி மாறுதலைப் பெற்றுக் கொள்ளும் உரிமை இருப்பதாகத்தான் கருதி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் வழங்கப்பட்டது.
ஆனால் 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகளில் விதி 9 ஆனது பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்குப் பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது . மேற்கண்ட விவரம் தீர்ப்புக்குப் பின்னரே தெரிய வருவதால் , தீர்ப்பு வழங்கப்பட்ட நாளான 23.03.2023 வரை பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பழையபடியே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதலை வழங்கி , தீர்ப்புக்கு பிந்தைய நாளில் இருந்து வேண்டுமானால் , பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழங்க இயாலாது என்று தீர்ப்பில் திருத்தம் செய்து வழங்குமாறு சீராய்வு மனுவில் வாதிடப்பட்டது அதை நிராகரித்த நீதிமன்றம் , விதிகளுக்குப் புறம்பாக எதையும் நீதிமன்றம் வழங்க இயலாது . மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் விதிகள் பதவி உயர்வு முதுகலை ஆசிரியர்களுக்குப் பொருந்துவதாக இல்லை என்று பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே சமயம் , இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டுதான் 2016 ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே 01.01.2016 முதல் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மீண்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் , உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியில் ஏதேனும் கூடுதலாக ஊதியம் பெற்றிருந்தால் , அதை திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் , ஆசிரியரகப் பணியில் சேர்ந்தால் , மீண்டும் முதுகலை அப்பணியிடத்தில் பழைய முன்னுரிமை அப்படியே தொடரும் எனவும் சில் சலுகைகளை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...