நிகழ் பருவத் தேர்வில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக்கட்டணம் உயத்தப்படாது என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், உயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. இதையடுத்து 50 சதவிகித தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக்கட்டணம் ரூ.150-லிருந்துரூ.225-ஆக உயத்தியுள்ளார்கள். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். தேர்வுக்கட்டணம் தொடர்பாக அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்கள், தேர்வுக்கட்டுபாட்டாளர்களுடன் கலந்துப்பேசி ஒரே மாதிரியான தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க முடிவு எடுக்கப்படும்.
எனவே, நிகழ் பருவத் தேர்வில் தேர்வு கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பழைய தேர்வுக்கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
இந்த நிலையில், உயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரிகளில் கூடுதலாக செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை செலுத்தியவர்கள் அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...