10.03.2020க்கு முன்பு உயர்கல்வித்தகுதி ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குத் தொடர்வதற்கான விவரங்கள்
1. ஆசிரியர் பெயர் :
2. த/பெ பெயர் :
3. பிறந்த தேதி :
4. முதன் முதலில் நியமனமான பணி :
5. முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி :
6. தற்போதைய பணி :
7. தற்போதைய பணியில் சேர்ந்த தேதி :
8. பணிபுரியும் மாவட்டம் :
9. பணிபுரியும் வட்டாரம் :
10.வீட்டு முகவரி :
11.பள்ளி முகவரி
*ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் விவரம்!* *******
*10.03.2020க்கு முன்பு உயர் கல்வித்தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களில், ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களைக் கீழ்க்கண்ட படிவத்தில் வட்டார/ நகர/மாநகரக் கிளைகள் பெற்று சார்ந்த மாவட்டக் கிளைகளின் வழியே மாநில அமைப்பிற்கு அனுப்பிட அனைத்து வட்டார/ நகர/மாநகர/மாவட்டக் கிளைகளையும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.
*மேற்கண்டவாறு பெறப்பட்ட தனிப் படிவத்துடன் கீழ்க்கண்ட மாதிரிப் படிவத்தில் கண்டவாறு A4 Size பேப்பரில் வழக்குத் தொடுப்பவர்களிடம் வரிசையாகக் கையொப்பம் பெற்று அளிக்கவும்.
*ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக வழக்குத் தொடுப்பது சார்ந்து சமீபத்தில் மாநில நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞருடன் ஆலோசித்ததன் பேரில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடுப்பதென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் முடிவு செய்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பாக வழக்குத் தொடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகை விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.
******
தோழமையுடன்
ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...