ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் அடிப்படை உரிமை மட்டுமல்ல, கடமையாகும். இதனை நாடுமுழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டி இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஓவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல்
ஆணையம் கொண்டாடுகிறது.இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை பள்ளி
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட மத்திய கல்வி அமைச்சகத்துடன்
ஒப்பந்தம் விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்த உள்ளது.இது குறித்து தலைமை தேர்தல்
ஆணையர் ராஜிவ்குமார் கூறியது, இந்த ஒப்பந்தத்தின் படி பள்ளியில் 10ம்
வகுப்பு மாணவர்களிடம் வாக்களிப்பதன் அவசியம், நமது அடிப்படை உரிமை என்பது
குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...