துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலக தகவல்.
எதிர்வரும் 20.11.2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
பணி நியமனத்திற்கு மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வு TET அவசியம். அனைத்து விதமான பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவின்படி உத்தரவினை பெறுவதற்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முயற்சி எடுத்து வருகிறார்.
ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை ஆணை கிடைக்குமானால் உடனடியாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளையும் மாறுதல்களையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் தகுதியானோர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...