Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பீங்கான் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு


பீங்கான் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு!

வீட்டு உபயோகப் பொருள்களில் நமக்குப் பயன்படுபவை பல பீங்கான் பொருட்களாக உள்ளன. அலுமினிய பொருள்களால் உடல் நலனுக்குக் கேடு ஏற்பட்டாலும் ஏற்படலாம்; ஆனால் பீங்கான் பொருட்களால் எந்தவித உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. எனவே பீங்கான் தொழில்நுட்பத்துக்கு வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. 

Institute of Ceramic Technology, Cuddalore 

தமிழக அரசின் ஊரகத் தொழில் துறையின் கீழ், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் "டிப்ளமோ இன் செராமிக்ஸ் டெக்னாலஜி' (Diploma in Ceramic Technology) என்ற பட்டயப்படிப்பு உள்ளது. 

இதில் மூன்று ஆண்டு படிப்பும், ஆறு மாத காலம் தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

இக்கல்லூரி கடந்த 1964 ஆம் ஆண்டு விருத்தாச்சலத்தில் பீங்கான் தொழில் கூடம் தொடங்கப்பட்டது. அப்போது பீங்கான் தொடர்பான படிப்பினை கற்றுக் கொடுக்கும் விதமாக செராமிக் பயிற்சி பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு அரசால் பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  

கல்லூரி தொடங்கப்பட்ட போது சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பட்டயப் படிப்பாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இந்த படிப்பில் சேருபவர்களுக்கு மூன்று ஆண்டு காலப் படிப்பும் ஆறு மாத கால பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

பிளஸ் டூ தேர்ச்சி பெற்று வருபவர்களுக்கு இரண்டு ஆண்டு படிப்பும், ஆறு மாத கால பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தொழில் நுட்பக் கல்வி இயக்கம் இந்த படிப்பிற்கு பாடத்திட்டங்களை வழங்குகிறது.

தொடக்கத்தில் மெக்கானிக்கல், பிசிக்ஸ், அறிவியல், கணிதம், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். கிராப் (வடிவமைப்பு) பாடமும் உண்டு. கண்ணாடியின் மூலப் பொருள்களின் தன்மை, எந்த விகிதாசாரத்தில் கலவை செய்ய வேண்டும்? பல்வேறு விதமான கண்ணாடிகளின் தொழில் நுட்பம் குறித்த பாடங்களும், தரையில் பதிக்கப்படும் டைல்ஸ்களின் தன்மை, வகைகள், கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கோப்பைகளின் தன்மை, வாஷ்பேஷின் வடிவமைப்பு, பீங்கான் பொருட்களைத் தயாரிக்கும்முறை உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். இறுதியில் ஆறு மாத காலம் தொழிற் பயிற்சி அளிக்கப்படும். 

பாண்டிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கார் கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் டைல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 

இந்த பீங்கான் தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. வங்கியில் கடனுதவி பெற்று சொந்தமாகவும் தொழில் தொடங்கலாம். பீங்கான் தொழில் நுட்பம் என்பது மேம்பட்ட தொழில் நுட்பமாகும். இந்த படிப்பில் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாக இருக்கும்'' என்றார். 

சென்னை அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் (Alagappa College of Technology , Guindy, Chennai) B.Tech. மற்றும் M.Tech செராமிக் டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

B.Tech, செராமிக் டெக்னாலஜி முழுநேர 4 வருட படிப்பு.
சேர்க்கை: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலம்.

கூடுதல் தகவல்களுக்கு: 

https://cac.annauniv.edu/uddetails/udug_2012/CERAMIC.pdf

https://www.annauniv.edu/pdf/MIT-Workshop%20Brochure.pdf






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive