Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்!!

 FB_IMG_1699848445269

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் டிச.16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 

அந்தத் தேர்வுக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என 
தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, 
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் (சென்னை தவிர) அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகா ரம் பெற்ற பள்ளிகளில் 
9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நிக ழாண்டுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்த தேர்வெழுத விரும்பும் மாண வர்கள், தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக நவம் பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 14-ஆம் தேதி முதல் பதிM றக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப் பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத் தில் நவம்பர் 17 முதல் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற் றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல கங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive