சர் ஜெகதீஸ் சந்திர போஸ் |
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
விளக்கம்:
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.
Grasp all, lose all
பேராசை பெரு நட்டம்
இரண்டொழுக்க பண்புகள் :
2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.
பொன்மொழி :
தோல்வி அடைவதற்கு
பல வழிகள் காரணங்களாக
அமையலாம்.. ஆனால்
வெற்றி பெறுவதற்கு
ஒரே காரணம் தான்
அது உன் “உழைப்பு”.
பொது அறிவு :
1. உலகில் அதிக மழைப்பொழிவை பெறும் இடம்?
விடை: மௌசின் ராம் ( மேகாலயா)
2. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: சர் ஜெகதீஷ் சந்திர போஸ்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பூசணிப் பூ: பூசணிப் பூக்களில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது மற்றும் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. பூசணி பூக்கள் ஈறுகள் மற்றும் பல் இனாமல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
நீதிக்கதை
நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.
அது எப்பவும் தன்னோட அம்மாவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடேயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும்.
சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி.
ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தளைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு.
அப்படி சுவாரசியமா சாப்பிட்டுகிட்டு இருந்த ஆட்டுக்குட்டி தன்னோட அம்மாவையும் தன்னோட ஆட்டு கூட்டத்தையும் மறந்துடுச்சு.
சாயந்திரம் ஆனதால அந்த ஆட்டு கூட்டம் தங்களோட கிராமத்த நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க
ஆனா இது தெரியாத ஆட்டு குட்டி தன்னோட சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு.
அப்ப அங்க ஒரு ஓநாய் வந்துச்சு. அத பார்த்த ஆட்டுக்குட்டி ரொம்ப பயந்து போச்சு.இருந்தாலும்
கொஞ்சம் தைரியமா இருந்த ஆட்டுக்குட்டிக்கு ஒரு யோசனை வந்துச்சு.
உடனே அந்த ஓநாய்கிட்ட ஐயா நீங்க எப்படியும் என்ன சாப்பிட போறீங்க, அதனால என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துங்கனு சொல்லுச்சு.
அந்த ஓநாயும் உன்னோட கடைசி ஆசை என்னனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த ஆட்டுக்குட்டி சொல்லுச்சு, எனக்கு டான்ஸ் ஆடணும்போல இருக்கு நீங்க ஒரு பாட்டு பாடுங்கனு சொல்லுச்சு.
உடனே அந்த ஓநாய் பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த சத்தம் கேட்ட ஆட்டு கூட்டத்தை சார்ந்த வேட்டை நாய்களுக்கு அந்த சத்தம் கேட்டுச்சு.
உடனே அந்த வேட்டை நாய்கள் எல்லாம் ஓநாய் சத்தம் வர்ற இடத்துக்கு ஓடி வந்துச்சுங்க.
வேட்டை நாய்கள பார்ததும் ஓநாய் அங்க இருந்து ஓடி போய்யிடுச்சு, அங்க வந்த அந்த ஆட்டு குட்டியோட அம்மா நடந்த எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு ,ஆட்டு குட்டியோட புத்திசாலித்தனத்தை பாராட்டுச்சு.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...