மேற்கு
வங்க மாநிலத்தில் மொத்தம் 25 அரசு மற்றும் 600 தனியார் பி.எட்.,
கல்லூரிகள் உள்ள நிலையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 253 தனியார்
பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, ஆசிரியர் பயிற்சிக்கான முறையான உள்கட்டமைப்பை பின்பற்றாததால், ஆசிரியர் பயிற்சி, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான மேற்கு வங்க பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் போதிய ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை கல்லூரிகள் உறுதி செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...