Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1-ம் வகுப்பு சேர்க்க சரியான வயது எது? ஒரு விவாதம்

 rX8tbwWyaezetMwrbnk7

1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது மாநிலங்களுக்கிடையே வயது அளவுகோல்களில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. மார்ச் 2022 நிலவரப்படி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 வயது நிறைவு செய்யாத குழந்தைகளை 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கின்றன.

1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது மாநிலங்களுக்கிடையே வயது அளவுகோல்களில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. மார்ச் 2022 நிலவரப்படி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 வயது நிறைவு செய்யாத குழந்தைகளை 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கின்றன.

இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பள்ளிகள் 6 வயதுக்குட்பட்ட மாணவர்களை 1-ம் வகுப்பிற்கு தொடர்ந்து சேர்க்க உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 1-ம் வகுப்பில் சேருவதற்கான வயதை சீரமைக்க வலியுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமீபத்தில் எழுதிய கடிதங்களுக்கு இது முரணானது.

மார்ச் 2022 இல் லோக்சபாவில் மத்திய அரசு அளித்த பதிலின்படி, 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது மாநிலங்களுக்கிடையே வயது வரம்புகளில் பல வேறுபாடுகள் உள்ளன. மார்ச் 2022 நிலவரப்படி, 6 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு சேர்க்கையை அனுமதிக்கும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

குழந்தைகள் முறையான கல்வியைத் தொடங்க எந்த வயது பொருத்தமானது, அது ஏன் முக்கியமானது? நாங்கள் இங்கே விளக்குகிறோம்.

தேசிய கல்விக் கொள்கையில் கூறியுள்ளபடி, 3-8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (அடிப்படை நிலை) முறையான பள்ளிக் கல்விக்கான   ‘5+3+3+4’ வயது அடிப்படையாக அமைந்துள்ளது. 8-11 வயது (ஆயத்த நிலை), 11-14 வயது (நடுத்தர நிலை), 14-18 ஆண்டுகள் (இறுதி நிலை) ஆகும்.

இது ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பள்ளிக் கல்வி என்றும் அழைக்கப்படுகிறத. இதை முறையான பள்ளிக் கல்வியின் கீழ் கொண்டுவருகிறது. மூன்று வருட ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியை முடித்த பிறகு, 1-ம் வகுப்பில் சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கு ஒரு குழந்தை 6 வயதாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

இது ஏன் இப்போது விவாதமாகிறது?

புதிய தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி 2020) தொடங்கப்பட்டதில் இருந்து, மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி, புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆறு வயதில் 1-ம் வகுப்பில் சேர்க்கைக்கான வயதை சீரமைக்க வலியுறுத்துகிறது. குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை நுழைவு வயது மாநிலங்கள் முழுவதும் மாறுபடுவதால் - சிலர் 5 வயதை எட்டிய பிறகு 1-ம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கிறார்கள், மற்றவர்கள் 6 ஆண்டுகளில் சேர்க்கிறார்கள் - மத்திய அரசின் என்.இ.பி விதிமுறைப்படியும் அதை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நினைவூட்டலை வெளியிடும் போதெல்லாம், இந்த விஷயம் செய்திகளில் கவனத்தை ஈர்க்கிறது.

உதாரணமாக, கடந்த ஆண்டு, என்.இ.பி 2020-ன் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகும்விதமாக கேந்திரிய வித்யாலயாக்கள் 1-ம் வகுப்புக்கான சேர்க்கை வயதை ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தியபோது, ​​ஒரு பெற்றோர் குழு நீதிமன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. பிப்ரவரி 2022-ல் சேர்க்கை செயல்முறை தொடங்குவதற்கு சற்று முன்பு இந்த மாற்றம் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டது என்று அவர்கள் வாதிட்டனர். டெல்லி உயர் நீதிமன்றம் இறுதியில் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த ஆண்டும், மிக சமீப காலம் வரை, 1-ம் வகுப்பு நுழைவு வயதை சீரமைப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு கல்வி அமைச்சகம் மற்றொரு நினைவூட்டலை அனுப்பிய பிறகு, டெல்லி அரசு, குறைந்தபட்சம் இந்த கல்வியாண்டில், டெல்லி பள்ளிக் கல்வி விதிகளின்படி (DSEAR 1973) தற்போதுள்ள வழிகாட்டுதல்களைத் தொடர முடிவு செய்தது. இது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்க்கையை அனுமதிக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 6 வயது முதல் 14 வயது வரை கல்விக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதாவது ஒரு குழந்தை 6 வயதில் ஆரம்பக் கல்வியைத் (1-ம் வகுப்பு படிக்க) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் வரைவு தொடர்பான கல்வியாளர்களின் கருத்துப்படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் உலகளாவிய வயதைக் கருத்தில் கொண்டு 6 வயது அடையாளம் காணப்பட்டது, அதாவது 6 அல்லது 7 வயதில் ஒரு குழந்தையை வகுப்பில் சேர்க்க வேண்டும்.

வரைவுப் நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்த தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர் கோவிந்தா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ஆர்.டி.இ 1-ம் வகுப்பைத் தொடங்குவதற்கான வயது என்று சொல்லும் 6 வயது என்பது வெறுமனே மீண்டும் வலியுறுத்துவதாகும். இது ஏற்கனவே நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. காந்தியின் அடிப்படைக் கல்வி பற்றிய யோசனையிலும் இதுவே இருந்தது. 1940-களில் இருந்து செல்லும் சார்ஜென்ட் கமிஷன் (இந்தியாவில் போருக்குப் பிந்தைய கல்வி வளர்ச்சி) அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

மேலும், “ஆர்.டி.இ சட்டம் முறையான கட்டாயக் கல்வியை அமலாக்குவதற்கான நுழைவு வயதைக் குறிப்பிட வேண்டும், இது பல மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது, இது வகுப்பு 1-ம் வகுப்பு மாணவர்களை சேர்க்கும் உண்மையான வயது பற்றிய குழப்பத்திற்கு வழிவகுத்தது. உண்மையில், ஆர்.டி.இ சட்டத்தில் உள்ள பெரும்பாலான ஷரத்துக்கள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளன” என்று கோவிந்தா கூறினார்.

முறையான கல்விக்கான நுழைவு வயது பற்றி ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்வி புலத்தைச் சேர்ந்த டேவிட் வைட்பிரெட், 'பள்ளி தொடங்கும் வயது: சான்றுகள்' என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையில், குழந்தைகளின் முறையான கல்வி ஆர்வத்துடன் தொடங்குவதற்கு முன், ஏன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக நேரம் தேவைப்படலாம் என்பதை விளக்கினார்.

வைட்பிரெட் தனது ஆராய்ச்சியில்,  “நியூசிலாந்தில் 5 மற்றும் 7 வயதில் முறையான கல்வியறிவு பாடங்களைத் தொடங்கிய குழந்தைகளின் குழுக்களை ஆய்வுகள் ஒப்பிட்டுள்ளன. அவர்களின் முடிவுகள், கல்வியறிவுக்கான முறையான கற்றல் அணுகுமுறைகளின் ஆரம்ப அறிமுகம் குழந்தைகளின் வாசிப்பு வளர்ச்சியை மேம்படுத்தாது, மேலும் சேதப்படுத்தும். 11 வயதிற்குள், இரு குழுக்களிடையே வாசிப்பு திறன் மட்டத்தில் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் 5 வயதில் தொடங்கிய குழந்தைகள் படிப்பதில் குறைவான நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர், பின்னர் தொடங்கிய குழந்தைகளை விட குறைவான புரிதலைக் காட்டினர். 55 நாடுகளில் 15 வயதுடையவர்களில் வாசிப்பு சாதனை பற்றிய தனி ஆய்வில், வாசிப்பு சாதனைக்கும் பள்ளி நுழைவு வயதுக்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.


பல்வேறு நாடுகளில் உலகம் முழுவதும் முறையான கல்வியைத் தொடங்க வயது என்ன?


“ஜப்பானில் மட்டுமின்றி, கிழக்கு ஆசியா முழுவதும் ஆரம்பப் பள்ளியைத் தொடங்குவதற்கான நிலையான வயது ஆறு. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வயது பொதுவானது. இந்த சமூகங்களில் உள்ள இளைய குழந்தைகள் ஒருவித பாலர் பள்ளியில் கலந்து கொள்வது வழக்கம் (கட்டாயமில்லை என்றாலும்). இது சம்பந்தமாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், குழந்தைகள் பொதுவாக 5 வயதில் பள்ளியைத் தொடங்குகிறார்கள், அவை வெளிப்படையாகத் தெரிகின்றன” என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையின் உதவிப் பேராசிரியர் லத்திகா குப்தா கூறினார்.


மறுபுறம், ஸ்காண்டிநேவிய நாடுகள், 7 வயதில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகின்றன, ஏனெனில், அவை உலகளாவிய குழந்தை பராமரிப்பு உள்ளது. பள்ளிக் கல்வியின் குழந்தை பராமரிப்பு அம்சத்தை மனதில் கொள்ள வேண்டும். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில், 5 வயதிற்குட்பட்டவர்களுக்கான குழந்தை பராமரிப்பு வழங்குவது மிகவும் செலவு அதிகம். அதேசமயம் ஸ்காண்டிநேவியாவில், 7 வயதிற்கு உட்பட்டோருக்கான பராமரிப்பு உலகளாவியது மற்றும் அரசு ஆதரவுடன் உள்ளது-” என்று லத்திகா குப்தா கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive