Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2023

     

லாலா லஜபதி ராய்



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம்:

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

பழமொழி :

Familiarity breeds contempt

பழக பழக பாலும் புளிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி :

ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் சொந்த வாழ்விலும் சரி, நமது சமுதாய வாழ்விலும் சரி, நாம் முன்னேற மாட்டோம். ஜவஹர்லால் நேரு

பொது அறிவு :

1. கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர்?

விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

2. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?

விடை: உருளைக்கிழங்கு


English words & meanings :

 tentacles –soft long leg like structure in sea animals like octobus. சிலவகைக் கடல் விலங்குகளில் காணப்படும் கால்கள் போன்ற நீண்டு மெலிதான மென் பகுதிகளில் ஒன்று; உணர்ச்சிக்கொடுக்கு; பற்றிழை.

ஆரோக்ய வாழ்வு : 

தாமரைப் பூ : தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ,இருமல் ,சுவாசக் கோளாறு நீங்கும்.

நவம்பர் 17

லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

 முன்னொரு காலத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர்- ஒரு நாள் அது அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது. உடனே 'மரத்தை விட்டிறங்கி எடுத்துப் பார்த்தால், அது ஒரு சிறிய கண்ணாடிக் குவளை, அதற்குள் செர்ரிப் பழம்! குரங்கு குவளைக்குள் கையை விட்டது... பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது... ஆனால், மூடிய கை வெளியே வரவில்லை. உள்ளே போகும் போது... நேராகப் போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே... வெளியில் கொண்டு வர முடியவில்லை... குரங்கைப் பிடிக்க வேடன் வைத்த பொறி... குரங்கு எப்படிச் சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தான்.   அங்கு குரங்கு போராடுவதைக் கண்டு அங்கே வந்தான். குரங்கு ஓடப் பார்த்தது. கை குவளையில் சிக்கிக் கொண்டதால், வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை. ஓர் ஆறுதல்! பழம் தன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது என்ற ஆறுதல் அதற்கு. வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான், அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான்... அதிர்ச்சியில் அது பழத்தை விட்டு விட்டது. கை வெளியில் வந்து விட்டது என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது. வேடனுடைய கண்ணாடிக் குவளையும், பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன.  "நாம் வேண்டாத ஆசையில், கையை நுழைத்து...குரங்கைப்போல அகப்பட்டு விடுகிறோம்...

இன்றைய செய்திகள்

17.11.2023

*தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18ம் தேதி கூடுகிறது.

* சந்திரயான் - 3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது: இஸ்ரோ அறிவிப்பு.

* அமெரிக்காவில் வசிப்பவர் ஆரோன் பார்த்தலோமி. இவர் பென்சில் சேகரிப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

* மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

வாட்ஸ் அப் சாட் : ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

*ரோஹித் சர்மா இந்தியாவின் ரியல் ஹீரோ நசீர் ஹுசைன் புகழாரம்.

Today's Headlines

*The special session of the Tamilnadu Assembly will be held on the 18th.

 * Chandrayaan-3 rocket part has fallen into sea: ISRO statement

 * Aaron Bartholomew is a US resident.  He holds the Guinness record for pencil collection.

 * Security arrangements are intense for the  tomorrow's polling in Madhya Pradesh and Chhattisgarh .

 *Whats Up Chat*: It is informed that all the history backup information will come under Google Cloud Storage restrictions' terms and conditions.

 *Rohit Sharma is India's real hero:  praises  Naseer Hussain.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive