Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2023

  

உலக சகிப்பு தன்மை நாள் 

 

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :298

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

விளக்கம்:

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.


பழமொழி :

Faith is the force of life

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

இரண்டொழுக்க பண்புகள் :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி :

உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்து விடும். ஜவஹர்லால் நேரு 

பொது அறிவு :

1. ஈராக் நாட்டின் தலைநகரம்?

விடை:பாக்தாக்

2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?

விடை:  பாரதிதாசன்

English words & meanings :

 whisker -a projectiing hair or britsle from the face or snout of many mammals.(விஸ்கர்ஸ்). withdraw-remove or take away (something) from a particular place or position திரும்பப் பெறுங்கள்.

ஆரோக்ய வாழ்வு : 

தாமரைப் பூ : கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன....

நவம்பர் 16

உலக சகிப்புத் தன்மை நாள்

உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.

நீதிக்கதை

 தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறது. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.

நீதி : தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால்,சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள

முடியாமல் போய் விடும்.

இன்றைய செய்திகள்

16.11.2023

*தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.

*தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி.

*  உலக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்திய அணி  70  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Today's Headlines

*Chance of rain with thunder and lightning in Tamil Nadu.

 * No. 1 storm warning flag hoisted out of 9 ports in Puducherry and Tamil Nadu.

 * It is expected that the public examination table for class 10, 11 and 12 will be released today.

 *Virat Kohli broke two records of Sachin Tendulkar.

 * In the Cricket  world cup semi finals between New Zealand & India , team India  won by 70 runs  and qualified for the final.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive