தமிழகத்தில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்ககூடிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தின் 3-வது வாரத்தில் முடிவடையும். அந்த வகையில் தேர்வு பணிகள் முடிவடைந்தவுடன் தமிழகத்தில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கு உண்டான அறிவிப்பும், தேர்தலுகான வாக்கு பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவைகளுகான அட்டவணை வெளியிடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளபட்டுள்ளது.
அந்த ஆலோசனையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் நிலவி வரும் தேர்வு பணிகளுக்கான அட்டவணை, உள்ளூர் விடுமுறை, பண்டிகைக்காலம், தொகுதி வாரியாக இருக்க கூடிய முக்கிய நிகழ்வுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சாவடி மையங்கள், வாக்கு பதிவு இயந்திரம், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கையை இன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார்.
அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் இதனை அடிப்படையாக கொண்டும், 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை அடிப்படையாக கொண்டு தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும்.
பலகட்டமாக இந்தியா முழுவதும் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் போது தமிழ்கத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...