Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNCMTSE Exam - நாளை நடைபெற இருக்கும் தேர்வை தள்ளி வைக்க கல்வியாளர்கள் கோரிக்கை |

தமிழக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்காக பல்வேறு வகையான சிறப்பு தேர்வுகளை  நடத்தி அதில் வெற்றி பெறக்கூடிய மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு NMMS தேர்வும் ,  ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு NTSE தேசிய திறனாய்வு தேர்வும் நடைபெற்று வருகிறது. 

11 ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த வருடம் முதல், புதிதாக பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு திறனாய்வு தேர்வு  நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அதற்காக தமிழகம் முழுவதும் பதினோராம் வகுப்பு பயிலக் கூடிய பல ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இத்தேர்வு நாளை 7.10.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தேர்வு கூட நுழைவு சீட்டு Hall Ticket வழங்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு உரிய சிறப்பு பூஜைகள் செய்து வீடுகளிலும், கோவில்களிலும் வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலான மக்கள் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் திடீரென புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான நாளைத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர். கிராம மக்களிடையேயும் இத்தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நாளை நடைபெற இருக்கும் தேர்விற்கு செல்லாமல் வீட்டில் பூஜையில் கலந்து கொள்ளுமாறும், தேவைப்பட்டால் அடுத்து நடைபெற இருக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் திறனறித்  தேர்வில் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

முதன்முறையாக தமிழக முதலமைச்சரின் பெயரால் நடைபெறும் இத்தேர்வில் மேலதிக மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், மாணவர்களின் மத உணர்வை மதிக்கும் நோக்கிலும் நாளை நடைபெற இருக்கும் தேர்வை அடுத்து வரக்கூடிய ஏதேனும் ஒரு வேலை நாட்களில் நடத்துமாறு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். 

அரசு உரிய நடவடிக்கை எடுத்து அறிவிக்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive