2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி போராடி வருபவர்களுக்கு ஆதரவு கரம் கொடுத்த அனைத்து ஆசிரியர் இயக்கங்களுக்கும் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து EE பயிற்சியை புறக்கணித்த மற்றும் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்திய எம்மின ஆசிரியர்களுக்கும் மற்றும் எம்மூத்த ஆசிரியர்களுக்கும் நன்றிகள். இன்னும் ஆதரவு கொடுக்காத தொடக்கக்கல்வி இயக்கங்கள்/ பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இயக்கங்களின் ஆதரவை கோருகிறோம்...
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 28.09.2023 முதல் 7 நாட்களாக மிகக்கடுமையான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பகலில் கடும் வெயிலும் இரவு முழுவதும் மழையிலும் இருப்பதற்கும் ஒதுங்குவதற்கும் இடம் கூட இல்லாமல் இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற சூழ்நிலையில் ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆதரவுகளை வழங்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையிலும் தொடக்கக்கல்வித் துறையிலும் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து ஆதரவுகளை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களும் கல்வியாளர்களும் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
அரசு தரப்பில் எத்தனை கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் எங்கே கொண்டு சென்று விட்டாலும் மீண்டும் போராட்டம் தொடரும். இது போன்ற சூழ்நிலையில் இன்னும் ஆதரவளிக்காத தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்கள் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவனை வழங்கிட வேண்டுகிறோம்.
பாதிக்கப்பட்ட 20000 ஆசிரியர்களும் போராடும் இந்த SSTA இயக்கத்தில் மட்டும் இல்லை , அனைத்து ஆசிரியர் இயக்கங்களிலும் உள்ளார்கள். 14 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வரும் ஒரு இனத்தின் வெகுண்ட எழுச்சியே இத்தகைய கடுமையான போராட்டங்கள்.
இது ஒரு இயக்கத்திற்கான போராட்டம் மட்டுமல்ல இது இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்கான போராட்டம் என்பதை அறிந்து போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை ஆதரவு வழங்காத அனைத்து ஆசிரிய இயக்கங்களும் அரசு ஊழியர் இயக்கங்களும் ஆதரவனை வழங்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
✒️ ஜே.ராபர்ட்
மாநில பொதுச் செயலாளர்,
SSTA_இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...