Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS - விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முக்கியத் தேதிகள்

 logo

 மத்திய, மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதில் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு உதவித் தொகை மூலம் 4 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 2008 முதல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

மாதம் ரூ.1000

இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்கு 7ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித் தொகை எவ்வளவு?

இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்ற வீதத்தில் மொத்தம் ரூ.36 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், 2023- 24ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி விண்ணப்பித்து வருகின்றனர்.

முக்கியத் தேதிகள்

இரண்டு தாள்களிலும் தனித்தனியாகத் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஒட்டுமொத்தமாகக் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டியது அவசியம். முன்னதாக தேசிய அளவில் மாணவர்களைத் தேர்வு எழுத வைக்க, மாநிலங்கள் தனியாகத் தேர்வு நடத்தும். நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே விண்ணப்பங்கள் இரண்டுகட்டங்களாக சரிபார்ப்பு நடைபெறும்.

முதல்கட்டமாக கல்வி நிறுவனம் அல்லது பள்ளி அளவிலான சரிபார்ப்பை, நிறுவன நோடல் அதிகாரி (Institute Nodal Officer - INO) மேற்கொள்வார். இதற்கு டிசம்பர் 15 கடைசித் தேதி ஆகும். அதேபோல மாவட்ட அளவில் (District Nodal Officer - DNO) நடைபெறும் இரண்டாம் கட்ட சரிபார்ப்புக்கு டிசம்பர் 30 கடைசித் தேதி ஆகும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive