இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டுஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அவர்கள் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஊதிய முரண்பாட்டை களையக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இவர்களது இந்த கோரிக்கையானது நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரத போராட்டத்தையே நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...