சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை மறுநாள் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப் படிப்பு ( B.Sc - Hons Agriculture (Self Supporting ) மற்றும் தோட்டக்கலை ( BSc (Hons Horticulture) படிப்புகளில், பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கும் காலி இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் (அக்.13) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் சேர விரும்பும் மாணவர்கள், இந்நாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடக்கும் சேர்க்கை நிகழ்வில் நேரடியாக பங்கேற்கலாம். பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து, கலந் தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று சேர்க்கையை தவறவிட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு தரவரிசைப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. மேலும் விவரங்களை, ‘https://annamalaiuniversity.ac.in’ என்ற இணயதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...